• Oct 28 2026

மண்ணைத் தோண்டியவருக்கு கிடைத்த புதையல்

Ziya / Oct 28th 2026, 3:08 pm
image

ஆஸ்திரேலியாவில் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் தங்கத்தைத் தேடிக்கொண்டிருந்த நபர் ஒருவருக்கு, சுமார் 1.2 கிலோகிராம் எடையுள்ள பிரம்மாண்டமான தங்கக் கட்டி கிடைத்துள்ளது. 


இதன் மதிப்பு இந்திய ரூபாயில் 1.30 கோடியைத் தாண்டும் என மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், இந்தக் கண்டுபிடிப்பு கவனத்தை ஈர்த்துள்ளது.


ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் உள்ள மவுண்ட் ஸ்டூவர்ட் பகுதியில் இந்தத் தங்கக் கட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


குறித்த நபர், வழக்கம்போல் மெட்டல் டிடெக்டர் கருவியுடன் தங்கத்தைத் தேடிக்கொண்டிருந்தபோது, நிலத்தின் அடியில் உலோகம் இருப்பதற்கான வலுவான சமிக்ஞையைப் பெற்றுள்ளார்.


நிலத்தின் மேற்பரப்பிலிருந்து சுமார் 100 மில்லிமீற்றர் ஆழத்தில் கிடைத்த அந்தச் சமிக்ஞையைத் தொடர்ந்து மண்ணைத் தோண்டியபோது, பெரிய தங்கக் கட்டி தென்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்தத் தங்கக் கட்டி, மொத்தம் 1.2 கிலோகிராம் எடை கொண்டது. இதில் சுமார் 940 கிராம் தூய தங்கம் இருப்பதாகக் கூறப்படுகிறது.


இதன் மதிப்பு இந்திய ரூபாயில் 1.30 கோடிக்கும் அதிகமாக இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.


மண்ணைத் தோண்டியவருக்கு கிடைத்த புதையல் ஆஸ்திரேலியாவில் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் தங்கத்தைத் தேடிக்கொண்டிருந்த நபர் ஒருவருக்கு, சுமார் 1.2 கிலோகிராம் எடையுள்ள பிரம்மாண்டமான தங்கக் கட்டி கிடைத்துள்ளது. இதன் மதிப்பு இந்திய ரூபாயில் 1.30 கோடியைத் தாண்டும் என மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், இந்தக் கண்டுபிடிப்பு கவனத்தை ஈர்த்துள்ளது.ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் உள்ள மவுண்ட் ஸ்டூவர்ட் பகுதியில் இந்தத் தங்கக் கட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.குறித்த நபர், வழக்கம்போல் மெட்டல் டிடெக்டர் கருவியுடன் தங்கத்தைத் தேடிக்கொண்டிருந்தபோது, நிலத்தின் அடியில் உலோகம் இருப்பதற்கான வலுவான சமிக்ஞையைப் பெற்றுள்ளார்.நிலத்தின் மேற்பரப்பிலிருந்து சுமார் 100 மில்லிமீற்றர் ஆழத்தில் கிடைத்த அந்தச் சமிக்ஞையைத் தொடர்ந்து மண்ணைத் தோண்டியபோது, பெரிய தங்கக் கட்டி தென்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தத் தங்கக் கட்டி, மொத்தம் 1.2 கிலோகிராம் எடை கொண்டது. இதில் சுமார் 940 கிராம் தூய தங்கம் இருப்பதாகக் கூறப்படுகிறது.இதன் மதிப்பு இந்திய ரூபாயில் 1.30 கோடிக்கும் அதிகமாக இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement