ஐக்கிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி மற்றும் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் காவிந்த ஜெயவர்தன ஆகியோர் மறைந்த போப் பிரான்சிஸுக்கு தமது இறுதி மரியாதையை செலுத்தியுள்ளனர்.
குறித்த இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் நேற்று முன்தினம் வியாழக்கிழமை (24) மாலை 6.40 மணிக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் அபுதாபிக்குப் புறப்பட்டனர்.
பின்னர், அபுதாபியிலிருந்து மற்றொரு விமானத்தில் ரோமில் உள்ள வத்திக்கான் நகரை சென்றடைந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், குறித்த இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் மறைந்த போப் பிரான்சிஸூக்கு தமது இறுதி அஞ்சலியை செலுத்தியுள்ளதுடன்,
இன்று நடைபெறும் பரிசுத்த திருத்தந்தை பிரான்சிஸின் இறுதி நல்லடக்க ஆராதனை நிகழ்விலும் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
போப் பிரான்சிஸுக்கு எதிர்க்கட்சி எம்.பிக்கள் இருவர் நேரில் சென்று இறுதி அஞ்சலி ஐக்கிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி மற்றும் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் காவிந்த ஜெயவர்தன ஆகியோர் மறைந்த போப் பிரான்சிஸுக்கு தமது இறுதி மரியாதையை செலுத்தியுள்ளனர்.குறித்த இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் நேற்று முன்தினம் வியாழக்கிழமை (24) மாலை 6.40 மணிக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் அபுதாபிக்குப் புறப்பட்டனர். பின்னர், அபுதாபியிலிருந்து மற்றொரு விமானத்தில் ரோமில் உள்ள வத்திக்கான் நகரை சென்றடைந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.இந்த நிலையில், குறித்த இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் மறைந்த போப் பிரான்சிஸூக்கு தமது இறுதி அஞ்சலியை செலுத்தியுள்ளதுடன், இன்று நடைபெறும் பரிசுத்த திருத்தந்தை பிரான்சிஸின் இறுதி நல்லடக்க ஆராதனை நிகழ்விலும் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.