பொருட்கள் திருடிய குற்றச்சாட்டில் அமரிக்காவில் இரண்டு இந்திய மாணவிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளியாகிய தகவல் தற்போது பேசுபொருளாகியுள்ளது.
நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள ஹோபோக்கன் நகரில் செயல்பட்டு வரும் ஷாப் ரைட் என்ற பல்பொருள் அங்காடியில், தாங்கள் வாங்கிய சில பொருட்களுக்கு பணம் செலுத்தாமல் இரு மாணவிகளும் வெளியேற முயன்றுள்ளனர்.
சுமார் 13,000 ரூபா மதிப்பிலான 27 வகையான பொருட்களை எடுத்து விட்டு, வெறும் 2 பொருட்களுக்கு மட்டுமே பணம் செலுத்தியுள்ளனர். எஞ்சிய பொருட்களை திருடிச் செல்ல முயன்றுள்ளனர்.
இது தொடர்பில் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதையடுத்து அங்கு சென்ற பொலிஸார் இரு மாணவிகளையும் கைது செய்தனர்.
மாணவிகளைக் கைது செய்த சம்பவம் பொலிஸார் அணிந்திருந்த பாடிகேமராவில் பதிவாகி வெளிவந்துள்ளது.
கைதின் பின்னர் மாணவிகளிடம் மேற்கொண்ட விசாரணைகளில் தங்களின் தவறை அவர்கள் ஒப்புக் கொண்டனர்.
அதன்போது மாணவிகளில் ஒருவர், தாம் திருடிய பொருட்களுக்கான தொகையை தற்போது கொடுத்து விடுவதாக தெரிவித்தார். மற்றொருவர், அந்தப் பொருட்களுக்கு இரட்டிப்புத் தொகையை கொடுக்க தயார் என்று தெரிவித்துள்ளார்.
மாணவிகள் இருவரும் திருட்டுக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக்கப்பட்டு பேசுபொருளாகியுள்ளது.
பொருட்கள் திருடிய குற்றச்சாட்டில் அமெரிக்காவில் இரு இந்திய மாணவிகள் கைது பொருட்கள் திருடிய குற்றச்சாட்டில் அமரிக்காவில் இரண்டு இந்திய மாணவிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளியாகிய தகவல் தற்போது பேசுபொருளாகியுள்ளது. நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள ஹோபோக்கன் நகரில் செயல்பட்டு வரும் ஷாப் ரைட் என்ற பல்பொருள் அங்காடியில், தாங்கள் வாங்கிய சில பொருட்களுக்கு பணம் செலுத்தாமல் இரு மாணவிகளும் வெளியேற முயன்றுள்ளனர்.சுமார் 13,000 ரூபா மதிப்பிலான 27 வகையான பொருட்களை எடுத்து விட்டு, வெறும் 2 பொருட்களுக்கு மட்டுமே பணம் செலுத்தியுள்ளனர். எஞ்சிய பொருட்களை திருடிச் செல்ல முயன்றுள்ளனர்.இது தொடர்பில் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதையடுத்து அங்கு சென்ற பொலிஸார் இரு மாணவிகளையும் கைது செய்தனர். மாணவிகளைக் கைது செய்த சம்பவம் பொலிஸார் அணிந்திருந்த பாடிகேமராவில் பதிவாகி வெளிவந்துள்ளது. கைதின் பின்னர் மாணவிகளிடம் மேற்கொண்ட விசாரணைகளில் தங்களின் தவறை அவர்கள் ஒப்புக் கொண்டனர். அதன்போது மாணவிகளில் ஒருவர், தாம் திருடிய பொருட்களுக்கான தொகையை தற்போது கொடுத்து விடுவதாக தெரிவித்தார். மற்றொருவர், அந்தப் பொருட்களுக்கு இரட்டிப்புத் தொகையை கொடுக்க தயார் என்று தெரிவித்துள்ளார். மாணவிகள் இருவரும் திருட்டுக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக்கப்பட்டு பேசுபொருளாகியுள்ளது.