• May 23 2026

2025 ஆம் ஆண்டில் இதுவரை டெங்கு நோயினால் 22 பேர் உயிரிழப்பு!

shanu / Oct 21st 2025, 1:48 pm
image

2025 ஆம் ஆண்டின் ஜனவரி முதல் நேற்று (20) வரை நாடு முழுவதிலும் 40,633 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவின் சமூக வைத்திய நிபுணர் பிரஷீலா சமரவீர தெரிவித்துள்ளார். 


இன்று (21) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில், 


கண்டறியப்பட்ட நோயாளர்களில் அதிகளவானோர் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளனர். 

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, காலி, மாத்தறை, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, குருநாகல், இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய  11 மாவட்டங்கள்   அதிக ஆபத்துள்ள மாவட்டங்களாக  அடையாளம் காணப்பட்டுள்ளன. 


இதனிடையே குறித்த காலப்பகுதியில் டெங்கு நோயினால் 22 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன. 

அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் இரத்தினபுரி மாவட்டத்தில் பதிவாகியுள்ளன  


எனவே, நுளம்புகள் இனப்பெருக்கம் செய்யும் இடங்களை முடிந்தவரை அழித்து சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருக்குமாறு சுகாதாரத்துறை பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது. 


இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடிக்குமாயின் வைத்தியர்களின் உரிய ஆலோசனையை பெறுமாறு பொதுமக்கள் அறிவறுத்தப்படுகின்றனர் என்று தெரிவித்தார்.   


2025 ஆம் ஆண்டில் இதுவரை டெங்கு நோயினால் 22 பேர் உயிரிழப்பு 2025 ஆம் ஆண்டின் ஜனவரி முதல் நேற்று (20) வரை நாடு முழுவதிலும் 40,633 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவின் சமூக வைத்திய நிபுணர் பிரஷீலா சமரவீர தெரிவித்துள்ளார். இன்று (21) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில், கண்டறியப்பட்ட நோயாளர்களில் அதிகளவானோர் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளனர். கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, காலி, மாத்தறை, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, குருநாகல், இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய  11 மாவட்டங்கள்   அதிக ஆபத்துள்ள மாவட்டங்களாக  அடையாளம் காணப்பட்டுள்ளன. இதனிடையே குறித்த காலப்பகுதியில் டெங்கு நோயினால் 22 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன. அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் இரத்தினபுரி மாவட்டத்தில் பதிவாகியுள்ளன  எனவே, நுளம்புகள் இனப்பெருக்கம் செய்யும் இடங்களை முடிந்தவரை அழித்து சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருக்குமாறு சுகாதாரத்துறை பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது. இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடிக்குமாயின் வைத்தியர்களின் உரிய ஆலோசனையை பெறுமாறு பொதுமக்கள் அறிவறுத்தப்படுகின்றனர் என்று தெரிவித்தார்.   

Advertisement

Advertisement

Advertisement