நாட்டில் பல்வேறு தரப்பினரால் முறைகேடான விதத்தில் சொத்துக்களை சேகரிக்கும் நடவடிக்கையை முறியடிப்பதற்காக பொலிஸ் குற்றச் செயல்கள் வரும்படிகள் விசாரணைப் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
அதற்கமைய போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் ஏனைய முறைகேடான விதத்தில் ஈட்டிய சொத்துகளை இனி எந்த தரப்பினரும் அனுபவிக்க முடியாது என பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார்.
'பொலிஸ் குற்றச் செயல்கள் வரும்படிகள் விசாரணைப் பிரிவு' (பி.சி.ஐ.டி) பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தலைமையில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் பங்கேற்புடன் நேற்று பொலிஸ் தலைமையகத்தில் அமைந்துள்ள பழைய கட்டிடம் ஒன்றில் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
கடந்த காலங்களில் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக 8 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனாக பெறப்பட்டுள்ள போதும், தற்போதுள்ள அதன் கையிருப்பு 2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மாத்திரமே என கணக்காய்வாளர் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
6 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு என்ன நடந்தது என்பது புதிராக உள்ளது.
நாட்டினுள் பல்வேறு தரப்பினரால் முறைகேடான விதத்தில் சொத்துக்களை சேகரிக்கும் நடவடிக்கையை முறியடிப்பதற்காக இந்த விசேட பொலிஸ் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
சர்வதேசத்தின் நன்மதிப்பை பெற்ற குற்றச் செயல்கள் வரும்படிகள், சட்டத்தின் பிரகாரம் இந்த பொலிஸ் பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள பாதாள உலகக்குழு செயற்பாடுகள் மற்றும் போதைப்பொருள் வலையமைப்பை இல்லாதொழிப்பதற்கு இப்பிரிவின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும்.
பாதாள உலகக்குழு தொடர்பான சட்ட மூலத்தை தயாரிப்பதற்கு தேவையான நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அத்தோடு நிகழ்நிலைப் பாதுகாப்பு திருத்தச் சட்டம் நீதி அமைச்சு, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு, வெகுசன ஊடக அமைச்சு மற்றும் வெளிநாட்டு விவகார அமைச்சு ஆகிய அமைச்சுக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் விசேட குழுவால் தயாரிக்கப்பட்டு வருகிறது.
எவ்வாறெனினும் எதிர்வரும் 2 மாதங்களுக்குள் அப்பணிகள் பூர்த்தி செய்யப்படும். பயங்கரவாத ஒழிப்புச் சட்டத்தை இல்லாமல் செய்து அதற்கு நிகரான புதிய சட்டத்தை கொண்டு வருவதற்கு அவசியமான குழு நியமிக்கப்பட்டு அதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இயற்றப்படும் சட்டங்கள் சமூகம் உணரும் வகையில் முறையாக அமுல்படுத்தப்பட வேண்டும். பொது மக்களுக்கு நீதி கிடைக்க உரிய நேரத்தில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது அவசியம்.
பாதாள உலகச் செயற்பாடுகளை முறியடிக்கும் வகையில் இந்த புதிய பொலிஸ் பிரிவு தாபிக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் ஏனைய முறைகேடான செயற்பாடுகளினூடாக ஈட்டிய சொத்துகளை இனி எந்த தரப்பினரும் அனுபவிக்க முடியாது என தெரிவித்தார்.
2025 ஆம் ஆண்டு 5ஆம் இலக்க குற்றச் செயற்பாடுகளின் ஊடாக ஈட்டப்பட்ட சொத்துக்கள் தொடர்பான விதிகளுக்கு அமைய, விசாரணை நடவடிக்கைகளுக்காக இந்த புதிய பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
இந்த பிரிவின் மூலம், சட்டவிரோதமாகப் பணம், சொத்து மற்றும் மூலதனங்களை ஈட்டியது குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்படும்.
பணிப்பாளர் நாயகம் ஒருவரின் தலைமையில் நிறுவப்பட்டுள்ள இந்த பிரிவுக்கு, பிரதிப் பணிப்பாளர் நாயகம் ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளார்.
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அசங்க கரவிட்ட மூன்று வருட காலத்திற்கு இந்தப் பிரிவின் பணிப்பாளராக நாயகமாக நியமிக்கப்பட்டுள்ள அதேநேரம், இப் பதவி நியமனம் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அங்கீகாரத்திற்கு உட்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அசங்க கரவிட்ட, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் நிதி மோசடிக் குற்றப் பிரிவின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராகவும் செயற்படுகிறார்.
குற்றச் செயற்பாடுகளின் ஊடாக ஈட்டப்பட்ட சொத்துக்கள் தொடர்பான விசாரணைப் பிரிவின் மூலம், 34 அரச நிறுவனங்கள் குறித்த விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கப்பட வேண்டும் என்று சட்டத்தின் மூலம் சட்டப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, எந்தவவொரு முறையிலும் ஈட்டிய மூலதனங்கள் குறித்து விசாரணை நடத்த சட்டப்பூர்வமாக இந்தப் பிரிவுக்கு அதிகாரம் உள்ளதுடன், குற்றம் அல்லாத சொத்துகள் ஈட்டல் குறித்து சிவில் வழக்குகள் தாக்கல் செய்யும் சாத்தியக்கூறும் இருப்பதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
பொது மக்களும் இந்தப் பிரிவில் நேரடியாக முறைப்பாடுகளைச் சமர்ப்பிக்க வாய்ப்பு உள்ளதுடன், சட்டப்பூர்வமற்ற முறையில் ஈட்டிய சொத்துக்களை 30 நாட்களுக்குள் தடை செய்ய அல்லது கையகப்படுத்தவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
முறைகேடாக ஈட்டிய சொத்துகளை இனி எவரும் அனுபவிக்க முடியாது; ஸ்தாபிக்கப்பட்டது PCID விசாரணைப் பிரிவு நாட்டில் பல்வேறு தரப்பினரால் முறைகேடான விதத்தில் சொத்துக்களை சேகரிக்கும் நடவடிக்கையை முறியடிப்பதற்காக பொலிஸ் குற்றச் செயல்கள் வரும்படிகள் விசாரணைப் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.அதற்கமைய போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் ஏனைய முறைகேடான விதத்தில் ஈட்டிய சொத்துகளை இனி எந்த தரப்பினரும் அனுபவிக்க முடியாது என பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார்.'பொலிஸ் குற்றச் செயல்கள் வரும்படிகள் விசாரணைப் பிரிவு' (பி.சி.ஐ.டி) பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தலைமையில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் பங்கேற்புடன் நேற்று பொலிஸ் தலைமையகத்தில் அமைந்துள்ள பழைய கட்டிடம் ஒன்றில் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.கடந்த காலங்களில் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக 8 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனாக பெறப்பட்டுள்ள போதும், தற்போதுள்ள அதன் கையிருப்பு 2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மாத்திரமே என கணக்காய்வாளர் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.6 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு என்ன நடந்தது என்பது புதிராக உள்ளது. நாட்டினுள் பல்வேறு தரப்பினரால் முறைகேடான விதத்தில் சொத்துக்களை சேகரிக்கும் நடவடிக்கையை முறியடிப்பதற்காக இந்த விசேட பொலிஸ் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.சர்வதேசத்தின் நன்மதிப்பை பெற்ற குற்றச் செயல்கள் வரும்படிகள், சட்டத்தின் பிரகாரம் இந்த பொலிஸ் பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.நாட்டில் உள்ள பாதாள உலகக்குழு செயற்பாடுகள் மற்றும் போதைப்பொருள் வலையமைப்பை இல்லாதொழிப்பதற்கு இப்பிரிவின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும். பாதாள உலகக்குழு தொடர்பான சட்ட மூலத்தை தயாரிப்பதற்கு தேவையான நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.அத்தோடு நிகழ்நிலைப் பாதுகாப்பு திருத்தச் சட்டம் நீதி அமைச்சு, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு, வெகுசன ஊடக அமைச்சு மற்றும் வெளிநாட்டு விவகார அமைச்சு ஆகிய அமைச்சுக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் விசேட குழுவால் தயாரிக்கப்பட்டு வருகிறது.எவ்வாறெனினும் எதிர்வரும் 2 மாதங்களுக்குள் அப்பணிகள் பூர்த்தி செய்யப்படும். பயங்கரவாத ஒழிப்புச் சட்டத்தை இல்லாமல் செய்து அதற்கு நிகரான புதிய சட்டத்தை கொண்டு வருவதற்கு அவசியமான குழு நியமிக்கப்பட்டு அதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இயற்றப்படும் சட்டங்கள் சமூகம் உணரும் வகையில் முறையாக அமுல்படுத்தப்பட வேண்டும். பொது மக்களுக்கு நீதி கிடைக்க உரிய நேரத்தில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது அவசியம். பாதாள உலகச் செயற்பாடுகளை முறியடிக்கும் வகையில் இந்த புதிய பொலிஸ் பிரிவு தாபிக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் ஏனைய முறைகேடான செயற்பாடுகளினூடாக ஈட்டிய சொத்துகளை இனி எந்த தரப்பினரும் அனுபவிக்க முடியாது என தெரிவித்தார். 2025 ஆம் ஆண்டு 5ஆம் இலக்க குற்றச் செயற்பாடுகளின் ஊடாக ஈட்டப்பட்ட சொத்துக்கள் தொடர்பான விதிகளுக்கு அமைய, விசாரணை நடவடிக்கைகளுக்காக இந்த புதிய பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இந்த பிரிவின் மூலம், சட்டவிரோதமாகப் பணம், சொத்து மற்றும் மூலதனங்களை ஈட்டியது குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்படும். பணிப்பாளர் நாயகம் ஒருவரின் தலைமையில் நிறுவப்பட்டுள்ள இந்த பிரிவுக்கு, பிரதிப் பணிப்பாளர் நாயகம் ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளார். சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அசங்க கரவிட்ட மூன்று வருட காலத்திற்கு இந்தப் பிரிவின் பணிப்பாளராக நாயகமாக நியமிக்கப்பட்டுள்ள அதேநேரம், இப் பதவி நியமனம் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அங்கீகாரத்திற்கு உட்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அசங்க கரவிட்ட, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் நிதி மோசடிக் குற்றப் பிரிவின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராகவும் செயற்படுகிறார். குற்றச் செயற்பாடுகளின் ஊடாக ஈட்டப்பட்ட சொத்துக்கள் தொடர்பான விசாரணைப் பிரிவின் மூலம், 34 அரச நிறுவனங்கள் குறித்த விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கப்பட வேண்டும் என்று சட்டத்தின் மூலம் சட்டப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, எந்தவவொரு முறையிலும் ஈட்டிய மூலதனங்கள் குறித்து விசாரணை நடத்த சட்டப்பூர்வமாக இந்தப் பிரிவுக்கு அதிகாரம் உள்ளதுடன், குற்றம் அல்லாத சொத்துகள் ஈட்டல் குறித்து சிவில் வழக்குகள் தாக்கல் செய்யும் சாத்தியக்கூறும் இருப்பதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. பொது மக்களும் இந்தப் பிரிவில் நேரடியாக முறைப்பாடுகளைச் சமர்ப்பிக்க வாய்ப்பு உள்ளதுடன், சட்டப்பூர்வமற்ற முறையில் ஈட்டிய சொத்துக்களை 30 நாட்களுக்குள் தடை செய்ய அல்லது கையகப்படுத்தவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.