மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய தங்கத்தின் விலை இன்றைய அளவில் சற்று சரிவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த சனிக்கிழமை தங்கத்தின் விலை சற்று குறைந்து விற்பனையாகி வந்த நிலையில், இன்றும் தங்க விலை சற்று வீழ்ச்சியடைந்துள்ளதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க விற்பனை நிலையம் தெரிவித்துள்ளது.
கடந்தவார இறுதியளவில், 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 390,000 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட நிலையில்,இன்று (21) 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 375,000 ரூபாவாக விற்பனையாகி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 375,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 347,000 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 46,875 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 43,375 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த வாரம் தங்கம் உச்சக்கட்டமாக 4 லட்சம் ரூபாவை எட்டியதில் மக்கள் பெரும் அதிர்ச்சியில் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
திடீரென சரிந்த தங்கத்தின் விலை ; நகைப் பிரியர்களுக்கு காத்திருக்கும் மகிழ்ச்சி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய தங்கத்தின் விலை இன்றைய அளவில் சற்று சரிவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த சனிக்கிழமை தங்கத்தின் விலை சற்று குறைந்து விற்பனையாகி வந்த நிலையில், இன்றும் தங்க விலை சற்று வீழ்ச்சியடைந்துள்ளதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க விற்பனை நிலையம் தெரிவித்துள்ளது. கடந்தவார இறுதியளவில், 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 390,000 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட நிலையில்,இன்று (21) 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 375,000 ரூபாவாக விற்பனையாகி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 375,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 347,000 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது. 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 46,875 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 43,375 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.கடந்த வாரம் தங்கம் உச்சக்கட்டமாக 4 லட்சம் ரூபாவை எட்டியதில் மக்கள் பெரும் அதிர்ச்சியில் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.