• Dec 28 2025

புரட்சி கண்ட பல் மருத்துவம்; உயிருடன் பிறக்கும் பற்கள் ஆய்வில் வெற்றி!

shanuja / Oct 24th 2025, 10:11 pm
image

பல் மருத்துவத்துறையில் உயிருடன் பிறக்கும் பற்களை வெற்றிகரமாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 


பல் மருத்துவத் துறையை ஒரு புதிய பாதைக்கு இட்டுச் செல்வதற்காக, உலகம் முழுவதும் உள்ள ஆய்வகங்கள்  உயிரியல் மனிதப் பற்களை வளர்ப்பதற்கான கடுமையான போட்டியில் ஈடுபட்டு வருகின்றனர். 


இத்தொழில்நுட்பம்  அடுத்த தசாப்தத்துக்குள் சாதாரண மாற்று முறையாக உருவெடுக்கக்கூடும் என பல் மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

 

லண்டன் கிங்ஸ் கல்லூரியின் முன்னோடி ஆராய்ச்சியாளரான மருத்துவர் அன்னா அன்ஜலோவா வொல்போனி மற்றும் அவரது குழுவினர் இத்துறையில் முக்கிய பங்காற்றி வருகின்றனர். 

 

அவர்களின் ஆரம்பகால ஆராய்ச்சிகளில், வயது வந்தவர்களில் ஈறுகளில் செல்களை மற்றும் எலியின் செல்கள் ஆகியவற்றை ஒன்றாக இணைத்து பல் ஒன்றை வெற்றிகரமாக வளர்த்து வந்தனர்.

 

2024 ஆம் ஆண்டில், பல் வளரக்கூடிய சூழல்  உருவாக்கும் பணியில், இயற்கையான வாய்வழி சூழலை மிகச்சரியாக பிரதிபலிக்கும் புதிய முறை ஒன்றையும் அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். 


இதற்கிடையில் உலகம் முழுவதும் பல்வேறு ஆராய்ச்சி குழுக்கள் பல்வேறு முறைகளைப் பின்பற்றுகின்றன. 

 

ஜப்பானின் கிடானோ மருத்துவமனை, பற்கள் இல்லாத நபர்களுக்கு புதிய பற்கள் வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில் ஆன்டிபாடி அடிப்படையிலான சிகிச்சையை மனித மருத்துவ பரிசோதனைகளில் சேர்த்துள்ளது. 

 

அதே நேரத்தில், வொஷிங்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஞானப் பற்களிலிருந்து எடுக்கப்பட்ட மனிதத் தண்டு செல்களைப் பயன்படுத்தி அடிப்படையிலிருந்து முக்கிய பல் செல்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

நோயாளியின் சொந்த செல்களிலிருந்து வளர்க்கப்படும் உண்மையான பற்கள், தற்போதைய பல் பொருத்துதல்களைவிட பல சிறப்பான நன்மைகளை வழங்கும் என நம்பப்படுகிறது. 

 

அதன் முக்கிய நன்மை, உடல் அதனை நிராகரிக்காது என்பதுதான். ஏனெனில் அது திசுக்களை இயற்கையாகவே ஏற்றுக்கொள்ளும். 

 

மேலும், அது எலும்பு மற்றும் இணைப்புத் திசுக்களுடன் முழுமையாக இணைந்திருப்பதால், பொருத்தப்பட்ட பற்களில் காணப்படும் உணர்வின்மை பிரச்சினை இல்லாமல் உண்மையான பல் போலவே உணரப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

புரட்சி கண்ட பல் மருத்துவம்; உயிருடன் பிறக்கும் பற்கள் ஆய்வில் வெற்றி பல் மருத்துவத்துறையில் உயிருடன் பிறக்கும் பற்களை வெற்றிகரமாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பல் மருத்துவத் துறையை ஒரு புதிய பாதைக்கு இட்டுச் செல்வதற்காக, உலகம் முழுவதும் உள்ள ஆய்வகங்கள்  உயிரியல் மனிதப் பற்களை வளர்ப்பதற்கான கடுமையான போட்டியில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தொழில்நுட்பம்  அடுத்த தசாப்தத்துக்குள் சாதாரண மாற்று முறையாக உருவெடுக்கக்கூடும் என பல் மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். லண்டன் கிங்ஸ் கல்லூரியின் முன்னோடி ஆராய்ச்சியாளரான மருத்துவர் அன்னா அன்ஜலோவா வொல்போனி மற்றும் அவரது குழுவினர் இத்துறையில் முக்கிய பங்காற்றி வருகின்றனர்.  அவர்களின் ஆரம்பகால ஆராய்ச்சிகளில், வயது வந்தவர்களில் ஈறுகளில் செல்களை மற்றும் எலியின் செல்கள் ஆகியவற்றை ஒன்றாக இணைத்து பல் ஒன்றை வெற்றிகரமாக வளர்த்து வந்தனர். 2024 ஆம் ஆண்டில், பல் வளரக்கூடிய சூழல்  உருவாக்கும் பணியில், இயற்கையான வாய்வழி சூழலை மிகச்சரியாக பிரதிபலிக்கும் புதிய முறை ஒன்றையும் அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதற்கிடையில் உலகம் முழுவதும் பல்வேறு ஆராய்ச்சி குழுக்கள் பல்வேறு முறைகளைப் பின்பற்றுகின்றன.  ஜப்பானின் கிடானோ மருத்துவமனை, பற்கள் இல்லாத நபர்களுக்கு புதிய பற்கள் வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில் ஆன்டிபாடி அடிப்படையிலான சிகிச்சையை மனித மருத்துவ பரிசோதனைகளில் சேர்த்துள்ளது.  அதே நேரத்தில், வொஷிங்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஞானப் பற்களிலிருந்து எடுக்கப்பட்ட மனிதத் தண்டு செல்களைப் பயன்படுத்தி அடிப்படையிலிருந்து முக்கிய பல் செல்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். நோயாளியின் சொந்த செல்களிலிருந்து வளர்க்கப்படும் உண்மையான பற்கள், தற்போதைய பல் பொருத்துதல்களைவிட பல சிறப்பான நன்மைகளை வழங்கும் என நம்பப்படுகிறது.  அதன் முக்கிய நன்மை, உடல் அதனை நிராகரிக்காது என்பதுதான். ஏனெனில் அது திசுக்களை இயற்கையாகவே ஏற்றுக்கொள்ளும்.  மேலும், அது எலும்பு மற்றும் இணைப்புத் திசுக்களுடன் முழுமையாக இணைந்திருப்பதால், பொருத்தப்பட்ட பற்களில் காணப்படும் உணர்வின்மை பிரச்சினை இல்லாமல் உண்மையான பல் போலவே உணரப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement