• Apr 15 2026

ஆவா குழு உறுப்பினர்கள் இருவருக்கு 90 நாட்கள் தடுப்புக்காவல்!

Chithra / Feb 10th 2026, 9:45 am
image


கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆவா குழுவைச் சேர்ந்த இரு உறுப்பினர்களை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்குப் பொலிஸ் மத்திய குற்றத்தடுப்புப் பணியகம் அனுமதி பெற்றுள்ளது. 


இந்தியாவுக்குத் தப்பிச் சென்றிருந்த இந்த இரு சந்தேகநபர்களும் அண்மையில் இலங்கைக்கு வருகை தந்தபோது, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்துப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். 


யாழ்ப்பாணத்தின் பிரபல ஆவா குழுவைச் சேர்ந்த இந்த சந்தேகநபர்கள், 2016ஆம் ஆண்டு மானிப்பாய் பகுதியில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்தின் பின்னர் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. 


சம்பந்தப்பட்ட சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காகச் சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததுடன், 

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டதன் பின்னர் மேலதிக விசாரணைகளுக்காக மத்திய குற்றத்தடுப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 


இவர்கள் போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்புகளைப் பேணி வந்துள்ளதோடு, கூலி துப்பாக்கிதாரிகளை வழங்கும் சட்டவிரோத செயலில் ஈடுபட்டு வந்துள்ளமையும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆவா குழு உறுப்பினர்கள் இருவருக்கு 90 நாட்கள் தடுப்புக்காவல் கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆவா குழுவைச் சேர்ந்த இரு உறுப்பினர்களை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்குப் பொலிஸ் மத்திய குற்றத்தடுப்புப் பணியகம் அனுமதி பெற்றுள்ளது. இந்தியாவுக்குத் தப்பிச் சென்றிருந்த இந்த இரு சந்தேகநபர்களும் அண்மையில் இலங்கைக்கு வருகை தந்தபோது, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்துப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணத்தின் பிரபல ஆவா குழுவைச் சேர்ந்த இந்த சந்தேகநபர்கள், 2016ஆம் ஆண்டு மானிப்பாய் பகுதியில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்தின் பின்னர் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காகச் சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததுடன், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டதன் பின்னர் மேலதிக விசாரணைகளுக்காக மத்திய குற்றத்தடுப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்புகளைப் பேணி வந்துள்ளதோடு, கூலி துப்பாக்கிதாரிகளை வழங்கும் சட்டவிரோத செயலில் ஈடுபட்டு வந்துள்ளமையும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement