• Nov 14 2026

தேசிய குத்துச்சண்டைப் போட்டியில் முல்லைத்தீவு வீரர்கள் வரலாற்றுச் சாதனை!

Ziya / Nov 9th 2026, 10:42 am
image

கொழும்பு றோயல் கல்லூரியில் நவம்பர் 1ஆம் திகதி முதல் 7ஆம் திகதி வரை நடைபெற்ற 50ஆவது தேசிய குத்துச்சண்டைப் போட்டியில் வடமாகாண அணி 7 பதக்கங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளது.


இதில் வடமாகாண அணியைப் பிரதிநிதித்துவப்படுத்திப் பங்குபற்றிய முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு வீராங்கனைகள் ஒரு வெள்ளிப் பதக்கம் மற்றும் மூன்று வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் நான்கு பதக்கங்களைப் பெற்று மாவட்டத்திற்குப் பெருமை சேர்த்துள்ளனர்.


இதன் மூலம் வடமாகாணத்தில் அதிக பதக்கங்களைப் பெற்ற மாவட்டமாக முல்லைத்தீவு திகழ்வதுடன், முல்லைத்தீவு மாவட்ட விளையாட்டுத்துறை வரலாற்றில் தேசிய மட்டப் போட்டியொன்றில் அதிக பதக்கங்களைப் பெற்ற முதல் சந்தர்ப்பமாகவும் இச்சாதனை பதிவாகியுள்ளது.


இப்போட்டியில் மாவட்ட ரீதியாக முல்லைத்தீவு நான்கு பதக்கங்களையும், வவுனியா இரண்டு பதக்கங்களையும், மன்னார் ஒரு பதக்கத்தையும் பெற்றுக்கொண்டுள்ளன.

முல்லைத்தீவு மாவட்டம் சார்பில் பதக்கங்களை வென்ற வீராங்கனைகளின் விபரம்:

S. யஷ்மிதா – இரண்டாம் இடம் (65–70 கிலோ எடைப்பிரிவு) – வெள்ளிப் பதக்கம்., S. றிசபா – மூன்றாம் இடம் (65–70 கிலோ எடைப்பிரிவு) – வெண்கலப் பதக்கம், K. காவியா – மூன்றாம் இடம் (57–60 கிலோ எடைப்பிரிவு) – வெண்கலப் பதக்கம், J. டிவோன்சி – மூன்றாம் இடம் (75–80 கிலோ எடைப்பிரிவு) – வெண்கலப் பதக்கம்.

தேசிய மட்டத்தில் தமது திறமைகளை வெளிப்படுத்தி, முல்லைத்தீவு மாவட்டத்திற்கும் வடமாகாணத்திற்கும் பெருமை சேர்த்துள்ள வீராங்கனைகளுக்குப் பலரும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.


மாவட்ட விளையாட்டுத்துறையின் வளர்ச்சியில் புதிய மைல்கல்லாகப் பதிவாகியுள்ள இச்சாதனை, எதிர்காலத்தில் தேசிய மற்றும் சர்வதேசப் போட்டிகளில் முல்லைத்தீவு மாவட்ட வீரர்கள் மேலும் பல வெற்றிகளைப் பெறுவதற்கான நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.


தேசிய குத்துச்சண்டைப் போட்டியில் முல்லைத்தீவு வீரர்கள் வரலாற்றுச் சாதனை கொழும்பு றோயல் கல்லூரியில் நவம்பர் 1ஆம் திகதி முதல் 7ஆம் திகதி வரை நடைபெற்ற 50ஆவது தேசிய குத்துச்சண்டைப் போட்டியில் வடமாகாண அணி 7 பதக்கங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளது.இதில் வடமாகாண அணியைப் பிரதிநிதித்துவப்படுத்திப் பங்குபற்றிய முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு வீராங்கனைகள் ஒரு வெள்ளிப் பதக்கம் மற்றும் மூன்று வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் நான்கு பதக்கங்களைப் பெற்று மாவட்டத்திற்குப் பெருமை சேர்த்துள்ளனர்.இதன் மூலம் வடமாகாணத்தில் அதிக பதக்கங்களைப் பெற்ற மாவட்டமாக முல்லைத்தீவு திகழ்வதுடன், முல்லைத்தீவு மாவட்ட விளையாட்டுத்துறை வரலாற்றில் தேசிய மட்டப் போட்டியொன்றில் அதிக பதக்கங்களைப் பெற்ற முதல் சந்தர்ப்பமாகவும் இச்சாதனை பதிவாகியுள்ளது.இப்போட்டியில் மாவட்ட ரீதியாக முல்லைத்தீவு நான்கு பதக்கங்களையும், வவுனியா இரண்டு பதக்கங்களையும், மன்னார் ஒரு பதக்கத்தையும் பெற்றுக்கொண்டுள்ளன.முல்லைத்தீவு மாவட்டம் சார்பில் பதக்கங்களை வென்ற வீராங்கனைகளின் விபரம்:S. யஷ்மிதா – இரண்டாம் இடம் (65–70 கிலோ எடைப்பிரிவு) – வெள்ளிப் பதக்கம்., S. றிசபா – மூன்றாம் இடம் (65–70 கிலோ எடைப்பிரிவு) – வெண்கலப் பதக்கம், K. காவியா – மூன்றாம் இடம் (57–60 கிலோ எடைப்பிரிவு) – வெண்கலப் பதக்கம், J. டிவோன்சி – மூன்றாம் இடம் (75–80 கிலோ எடைப்பிரிவு) – வெண்கலப் பதக்கம்.தேசிய மட்டத்தில் தமது திறமைகளை வெளிப்படுத்தி, முல்லைத்தீவு மாவட்டத்திற்கும் வடமாகாணத்திற்கும் பெருமை சேர்த்துள்ள வீராங்கனைகளுக்குப் பலரும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.மாவட்ட விளையாட்டுத்துறையின் வளர்ச்சியில் புதிய மைல்கல்லாகப் பதிவாகியுள்ள இச்சாதனை, எதிர்காலத்தில் தேசிய மற்றும் சர்வதேசப் போட்டிகளில் முல்லைத்தீவு மாவட்ட வீரர்கள் மேலும் பல வெற்றிகளைப் பெறுவதற்கான நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement