• Nov 14 2026

2027 ஜூன் மாதத்திற்குள் 5 புதிய கார்கள்- அதிரடி வாகன அறிமுகத்துக்குத் தயாராகும் மகிந்திரா!

Ziya / Nov 9th 2026, 9:49 am
image

இந்தியாவின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனமான மகிந்திரா அண்ட் மகிந்திரா, 2027 ஜூன் மாதத்திற்குள் ஐந்து புதிய வாகனங்களை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.


நிறுவனத்தின் நீண்டகாலத் திட்டத்தின்படி, 2031ஆம் ஆண்டுக்குள் மொத்தம் 16 புதிய மாடல்களை அறிமுகப்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 10 பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களும், 6 மின்சார வாகனங்களும் இடம்பெறவுள்ளன.


முதல் கட்டமாக அறிமுகமாகவுள்ள ஐந்து வாகனங்களில் மூன்று பயணிகள் வாகனங்கள், ஒரு இலகுரக வர்த்தக வாகனம் மற்றும் ஒரு மேம்படுத்தப்பட்ட மாடல் இடம்பெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது.


விஷன் எஸ் (Vision S) எஸ்.யூ.வி., பி.இ.07 (BE 07) மின்சார எஸ்.யூ.வி. மற்றும் ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் பிக்கப் (Scorpio Lifestyler Pickup) ஆகியவை அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இந்த மாடல்களின் முழுமையான பட்டியலை நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.


புதிய எஸ்.யூ.வி.க்கள் மற்றும் மின்சார வாகனங்கள் மூலம் இந்திய வாகனச் சந்தையில் தனது இருப்பை மேலும் வலுப்படுத்த மகிந்திரா திட்டமிட்டுள்ளது.

2027 ஜூன் மாதத்திற்குள் 5 புதிய கார்கள்- அதிரடி வாகன அறிமுகத்துக்குத் தயாராகும் மகிந்திரா இந்தியாவின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனமான மகிந்திரா அண்ட் மகிந்திரா, 2027 ஜூன் மாதத்திற்குள் ஐந்து புதிய வாகனங்களை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.நிறுவனத்தின் நீண்டகாலத் திட்டத்தின்படி, 2031ஆம் ஆண்டுக்குள் மொத்தம் 16 புதிய மாடல்களை அறிமுகப்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 10 பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களும், 6 மின்சார வாகனங்களும் இடம்பெறவுள்ளன.முதல் கட்டமாக அறிமுகமாகவுள்ள ஐந்து வாகனங்களில் மூன்று பயணிகள் வாகனங்கள், ஒரு இலகுரக வர்த்தக வாகனம் மற்றும் ஒரு மேம்படுத்தப்பட்ட மாடல் இடம்பெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது.விஷன் எஸ் (Vision S) எஸ்.யூ.வி., பி.இ.07 (BE 07) மின்சார எஸ்.யூ.வி. மற்றும் ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் பிக்கப் (Scorpio Lifestyler Pickup) ஆகியவை அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இந்த மாடல்களின் முழுமையான பட்டியலை நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.புதிய எஸ்.யூ.வி.க்கள் மற்றும் மின்சார வாகனங்கள் மூலம் இந்திய வாகனச் சந்தையில் தனது இருப்பை மேலும் வலுப்படுத்த மகிந்திரா திட்டமிட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement