• Nov 14 2026

விகாரையில் விசேட வழிபாடு... வீதியில் போராட்டம்! தையிட்டியில் மீண்டும் பதற்றம்

Chithra / Nov 9th 2026, 10:25 am
image


யாழ்ப்பாணம் - தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள விகாரையில் இன்று (09) விசேட வழிபாட்டு நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.


இந்நிலையில், குறித்த வழிபாட்டு நிகழ்வுகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலும், 

தமது பூர்வீகக் காணிகளை மீளப் பெற்றுக்கொடுக்குமாறு வலியுறுத்தியும் தையிட்டி பகுதி மக்களால் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.


காணி உரிமையாளர்களின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்பதுடன், ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகள் அவற்றின் உரிமையாளர்களிடம் மீள ஒப்படைக்கப்பட வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


விகாரையில் விசேட வழிபாடுகள் இடம்பெறும் அதேவேளை, அதற்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகின்றது.


விகாரையில் விசேட வழிபாடு. வீதியில் போராட்டம் தையிட்டியில் மீண்டும் பதற்றம் யாழ்ப்பாணம் - தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள விகாரையில் இன்று (09) விசேட வழிபாட்டு நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.இந்நிலையில், குறித்த வழிபாட்டு நிகழ்வுகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலும், தமது பூர்வீகக் காணிகளை மீளப் பெற்றுக்கொடுக்குமாறு வலியுறுத்தியும் தையிட்டி பகுதி மக்களால் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.காணி உரிமையாளர்களின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்பதுடன், ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகள் அவற்றின் உரிமையாளர்களிடம் மீள ஒப்படைக்கப்பட வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.விகாரையில் விசேட வழிபாடுகள் இடம்பெறும் அதேவேளை, அதற்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement