நாடளாவிய ரீதியில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இன்று (09) திங்கட்கிழமை சுகயீன விடுமுறை தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக, திருகோணமலை மாவட்டத்தின் தோப்பூர் உப பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் இன்றைய தினம் பணிக்கு சமூகமளிக்காது போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் காரணமாக தோப்பூர் உப பிரதேச செயலகம் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இன்றி வெறிச்சோடிக் காணப்பட்டதுடன், சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்காக வருகை தந்த பொதுமக்களும் சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியாமல் திரும்பிச் சென்றுள்ளனர்.
சம்பள உயர்வு, பதவி உயர்வில் காணப்படும் முரண்பாடுகளைத் தீர்த்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தே இந்தத் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் பிரதான செயலாளர் தம்மிக முனசிங்க, தமது பிரச்சினைகள் குறித்து பல சந்தர்ப்பங்களில் அதிகாரிகளுக்கு அறிவித்த போதிலும் இதுவரை உரிய கவனம் செலுத்தப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்தத் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாகப் பல அரச நிறுவனங்களின் உள்ளகப் பணிகள் பாதிக்கப்படக்கூடும் என அனைத்து இலங்கை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி அநுராத செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
தமது கோரிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பொறுப்பான அமைச்சர்களின் கவனத்தை ஈர்ப்பதற்கான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அரச நிர்வாக அமைச்சர் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சருடனும் பேச்சுவார்த்தை நடத்த எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடளாவிய ரீதியில் இன்று முடங்கிய முக்கிய அரச துறைகள் - சேவைகளைப் பெற முடியாமல் திரும்பிய மக்கள் நாடளாவிய ரீதியில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இன்று (09) திங்கட்கிழமை சுகயீன விடுமுறை தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இதன் ஒரு பகுதியாக, திருகோணமலை மாவட்டத்தின் தோப்பூர் உப பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் இன்றைய தினம் பணிக்கு சமூகமளிக்காது போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இதன் காரணமாக தோப்பூர் உப பிரதேச செயலகம் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இன்றி வெறிச்சோடிக் காணப்பட்டதுடன், சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்காக வருகை தந்த பொதுமக்களும் சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியாமல் திரும்பிச் சென்றுள்ளனர்.சம்பள உயர்வு, பதவி உயர்வில் காணப்படும் முரண்பாடுகளைத் தீர்த்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தே இந்தத் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் பிரதான செயலாளர் தம்மிக முனசிங்க, தமது பிரச்சினைகள் குறித்து பல சந்தர்ப்பங்களில் அதிகாரிகளுக்கு அறிவித்த போதிலும் இதுவரை உரிய கவனம் செலுத்தப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.இதேவேளை, இந்தத் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாகப் பல அரச நிறுவனங்களின் உள்ளகப் பணிகள் பாதிக்கப்படக்கூடும் என அனைத்து இலங்கை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி அநுராத செனவிரத்ன தெரிவித்துள்ளார்.தமது கோரிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பொறுப்பான அமைச்சர்களின் கவனத்தை ஈர்ப்பதற்கான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அரச நிர்வாக அமைச்சர் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சருடனும் பேச்சுவார்த்தை நடத்த எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.