• May 14 2025

கொத்மலை பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி..!

Sharmi / May 13th 2025, 12:38 pm
image

கொத்மலை பேருந்து விபத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் விளக்குகள் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது .

கொத்மலை, ரம்பொட கரடி எல்ல பகுதியில் 11ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த 22 பேருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், ஹட்டன்-கம்பொல பிரதான வீதியில் நேற்றையதினம் பூக்களைத் தூவி விளக்குகளை ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

விபத்தில் காயமடைந்த சுமார் 40 பேர் நுவரெலியா, நாவலப்பிட்டி மற்றும் கம்பளை அடிப்படை மருத்துவமனைகளிலும், பேராதனை மற்றும் கண்டி போதனா மருத்துவமனைகளிலும்  நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்களில் பலர் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் நுவரெலியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அனுருத்த ஹக்மன தெரிவித்தார்.

விபத்தில் காயமடைந்த பேருந்தின் நடத்துநர் கம்பளை ஆதார மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை பெற்ற பின்னர் வீட்டிற்கு திரும்பியுள்ளார்.  

விபத்துக்குப் பிறகு தொலைந்து போன பேருந்து டிக்கெட் புத்தகத்தை கொத்மலை பொலிஸார் மீட்டெடுத்துள்ளதாகவும் கொத்மலை பொலிஸார் தெரிவித்தனர்.



கொத்மலை பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி. கொத்மலை பேருந்து விபத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் விளக்குகள் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது .கொத்மலை, ரம்பொட கரடி எல்ல பகுதியில் 11ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த 22 பேருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், ஹட்டன்-கம்பொல பிரதான வீதியில் நேற்றையதினம் பூக்களைத் தூவி விளக்குகளை ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.விபத்தில் காயமடைந்த சுமார் 40 பேர் நுவரெலியா, நாவலப்பிட்டி மற்றும் கம்பளை அடிப்படை மருத்துவமனைகளிலும், பேராதனை மற்றும் கண்டி போதனா மருத்துவமனைகளிலும்  நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்களில் பலர் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் நுவரெலியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அனுருத்த ஹக்மன தெரிவித்தார்.விபத்தில் காயமடைந்த பேருந்தின் நடத்துநர் கம்பளை ஆதார மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை பெற்ற பின்னர் வீட்டிற்கு திரும்பியுள்ளார்.  விபத்துக்குப் பிறகு தொலைந்து போன பேருந்து டிக்கெட் புத்தகத்தை கொத்மலை பொலிஸார் மீட்டெடுத்துள்ளதாகவும் கொத்மலை பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement