• May 20 2025

போதைப் பொருட்களுக்கு அடிமையானவர்களுக்காக சிகிச்சை நிலையம்..!

Sharmi / May 19th 2025, 4:31 pm
image

தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் குழுக்கூட்டமானது இன்று (19) திருகோணமலை மாவட்ட செயலாளர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார தலைமையில் மாவட்ட செயலக உப ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.

கிழக்கு மாகாணத்தில் போதைப் பொருட்களுக்கு அடிமையானவர்களுக்காக சிகிச்சை நிலையமொன்றை ஆரம்பிப்பதற்கான ஆரம்ப கட்ட கலந்துரையாடலாக இது அமைந்துள்ளது.

இதன்போது மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சருமாகிய அருண் ஹேமச்சந்திரா, தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் பணிப்பாளர் நாயகம் கே.கே.எஸ்.கொத்தலாவல, பணிப்பாளர் (சிகிச்சை மற்றும் மறுவாழ்வு) யு.ஜி.சாந்த கமகே, பணிப்பாளர் (நிர்வாகம்) எம்.டி.எஸ். ஹேமச்சந்திரா, உதவி பணிப்பாளர் நிலானி அலுத்கே மற்றும் துறைசார்ந்த பிரதேச செயலக அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.


போதைப் பொருட்களுக்கு அடிமையானவர்களுக்காக சிகிச்சை நிலையம். தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் குழுக்கூட்டமானது இன்று (19) திருகோணமலை மாவட்ட செயலாளர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார தலைமையில் மாவட்ட செயலக உப ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.கிழக்கு மாகாணத்தில் போதைப் பொருட்களுக்கு அடிமையானவர்களுக்காக சிகிச்சை நிலையமொன்றை ஆரம்பிப்பதற்கான ஆரம்ப கட்ட கலந்துரையாடலாக இது அமைந்துள்ளது.இதன்போது மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சருமாகிய அருண் ஹேமச்சந்திரா, தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் பணிப்பாளர் நாயகம் கே.கே.எஸ்.கொத்தலாவல, பணிப்பாளர் (சிகிச்சை மற்றும் மறுவாழ்வு) யு.ஜி.சாந்த கமகே, பணிப்பாளர் (நிர்வாகம்) எம்.டி.எஸ். ஹேமச்சந்திரா, உதவி பணிப்பாளர் நிலானி அலுத்கே மற்றும் துறைசார்ந்த பிரதேச செயலக அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement