• Jun 03 2026

உலக முடிவில் 'செல்பி' எடுக்கச்சென்ற மாணவிக்கு நடந்த விபரீதம்; ஆபத்தை பொருட்படுத்தாது அதிரடியாக செயற்பட்ட சாரதி

Chithra / Mar 19th 2026, 6:47 pm
image


நுவரெலியா - ஹோட்டன் சமவெளி 'உலக முடிவு'  பகுதியில் இருந்து தவறி விழுந்த மாணவி  பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார் என 'உலக முடிவு' சுற்றுலாத் தளத்தின் மேலாளர் மஞ்சுலா மொனரதென்ன தெரிவித்துள்ளார். 


கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தைச் சேர்ந்த 23 வயதான மாணவியே இச் சம்பவத்திற்கு முகங்கொடுத்துள்ளார்.  


குறித்த மாணவி செல்பி எடுக்கச்சென்றபோது சுமார் 50 அடி உயரம் கொண்ட பாறையிலிருந்து இன்று (19) காலை கீழே விழுந்து ஒரு மரக் கிளையில் தொங்கிக்கொண்டிருந்தபோது பல மணிநேர தேடுதலின் பின் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.


கொழும்பு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர் குழு  'உலக முடிவு' சுற்றுலாத் தளத்தில் பிரதான பாறையைப் பார்வையிட வந்தபோதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 


குறித்த மாணவி செல்பி' எடுக்கச் முயன்ற போது தவறி கீழே விழுந்து ஒரு கிளையில் தொங்கிக்கொண்டிருந்தபோது ஹோட்டன் சமவெளி தேசிய வனப் பூங்காவைச் சேர்ந்த  சாரதி ஒருவர் பார்த்துள்ளார்.


இதையடுத்து, ஆபத்தைப் பொருட்படுத்தாமல் உடனடியாக செயற்பட்ட சாரதி, கீழே இறங்கி தொங்கிக்கொண்டிருந்த கிளையிலிருந்து பல்கலைக்கழக மாணவியை இழுத்து சரிவில் இருந்த  பாறையின் மீது அமர வைத்து,

அவரை மீட்க பொலிஸ் அதிகாரிகள், இராணுவம் மற்றும் பொலிஸ் சிறப்பு அதிரடிப்படையினரின் உதவியைக் நாடியுள்ளார். 


அதன்படி,  இலங்கை 3 ஆவது சிங்கப் படைப்பிரிவைச் சேர்ந்த இராணுவ வீரர்கள், நுவரெலியா பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகள், வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பட்டிப்பொல பொலிஸ் நிலைய அதிகாரிகள் ஆகியோர் இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கைக்குப் பின்னர் பல்கலைக்கழக மாணவி பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.


இதையடுத்து, குறித்த மாணவியை சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. 


உலக முடிவில் 'செல்பி' எடுக்கச்சென்ற மாணவிக்கு நடந்த விபரீதம்; ஆபத்தை பொருட்படுத்தாது அதிரடியாக செயற்பட்ட சாரதி நுவரெலியா - ஹோட்டன் சமவெளி 'உலக முடிவு'  பகுதியில் இருந்து தவறி விழுந்த மாணவி  பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார் என 'உலக முடிவு' சுற்றுலாத் தளத்தின் மேலாளர் மஞ்சுலா மொனரதென்ன தெரிவித்துள்ளார். கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தைச் சேர்ந்த 23 வயதான மாணவியே இச் சம்பவத்திற்கு முகங்கொடுத்துள்ளார்.  குறித்த மாணவி செல்பி எடுக்கச்சென்றபோது சுமார் 50 அடி உயரம் கொண்ட பாறையிலிருந்து இன்று (19) காலை கீழே விழுந்து ஒரு மரக் கிளையில் தொங்கிக்கொண்டிருந்தபோது பல மணிநேர தேடுதலின் பின் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.கொழும்பு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர் குழு  'உலக முடிவு' சுற்றுலாத் தளத்தில் பிரதான பாறையைப் பார்வையிட வந்தபோதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த மாணவி செல்பி' எடுக்கச் முயன்ற போது தவறி கீழே விழுந்து ஒரு கிளையில் தொங்கிக்கொண்டிருந்தபோது ஹோட்டன் சமவெளி தேசிய வனப் பூங்காவைச் சேர்ந்த  சாரதி ஒருவர் பார்த்துள்ளார்.இதையடுத்து, ஆபத்தைப் பொருட்படுத்தாமல் உடனடியாக செயற்பட்ட சாரதி, கீழே இறங்கி தொங்கிக்கொண்டிருந்த கிளையிலிருந்து பல்கலைக்கழக மாணவியை இழுத்து சரிவில் இருந்த  பாறையின் மீது அமர வைத்து,அவரை மீட்க பொலிஸ் அதிகாரிகள், இராணுவம் மற்றும் பொலிஸ் சிறப்பு அதிரடிப்படையினரின் உதவியைக் நாடியுள்ளார். அதன்படி,  இலங்கை 3 ஆவது சிங்கப் படைப்பிரிவைச் சேர்ந்த இராணுவ வீரர்கள், நுவரெலியா பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகள், வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பட்டிப்பொல பொலிஸ் நிலைய அதிகாரிகள் ஆகியோர் இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கைக்குப் பின்னர் பல்கலைக்கழக மாணவி பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.இதையடுத்து, குறித்த மாணவியை சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. 

Advertisement

Advertisement

Advertisement