நாட்டின் சில மாவட்டங்களில் இன்று வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்திற்கு அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
அதன்படி, வடக்கு, வடமத்திய, வடமேல், மேல், சபரகமுவ, தென் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்திலும் வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சில பகுதிகளில் உடலில் உணரப்படும் வெப்ப நிலை “எச்சரிக்கை நிலை” வரை உயரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், 21 மாவட்டங்களில் மக்கள் நீண்ட நேரம் வெளியில் இருப்பின் சோர்வு ஏற்படும் வாய்ப்பு உள்ளதாகவும், தொடர்ச்சியான வெளிப்புற செயற்பாடுக ளினால் தடைபிடிப்பு ஏற்படக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் தேவையற்ற வெளிப்புற செயல்பாடுகளை குறைத்து, போதிய நீர் அருந்தி பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை இன்று (24) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களின் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இன்று வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில் பிற்பகலில் பலத்த மழைக்கு வாய்ப்பு நாட்டின் சில மாவட்டங்களில் இன்று வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்திற்கு அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.அதன்படி, வடக்கு, வடமத்திய, வடமேல், மேல், சபரகமுவ, தென் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்திலும் வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன், சில பகுதிகளில் உடலில் உணரப்படும் வெப்ப நிலை “எச்சரிக்கை நிலை” வரை உயரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால், 21 மாவட்டங்களில் மக்கள் நீண்ட நேரம் வெளியில் இருப்பின் சோர்வு ஏற்படும் வாய்ப்பு உள்ளதாகவும், தொடர்ச்சியான வெளிப்புற செயற்பாடுக ளினால் தடைபிடிப்பு ஏற்படக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.எனவே, பொதுமக்கள் தேவையற்ற வெளிப்புற செயல்பாடுகளை குறைத்து, போதிய நீர் அருந்தி பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதேவேளை இன்று (24) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களின் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.