தெற்காசியாவின் முதல் ஒருங்கிணைந்த சொகுசு ரெசோர்ட்டான “சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்கா” (City of Dreams Sri Lanka) ஆகஸ்ட் 2 அன்று அதிகாரப்பூர்வமான ஆரம்ப விழா தனிப்பட்ட அழைப்பின் பேரில் மாத்திரம் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்கா,
பிரமாண்டமான திறப்பு விழாவிற்கான, அங்கீகரிக்கப்படாத டிக்கெட்டுகள் விநியோகிக்கப்படுவதாக தங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வு அழைப்பின் பேரில் மட்டுமே என்பதை நாங்கள் தெளிவுபடுத்த விரும்புகிறோம்.
மேலும் எந்த மூன்றாம் தரப்பினரும் டிக்கெட்டுகளை வழங்கவோ, விநியோகிக்கவோ அல்லது விற்கவோ அங்கீகரிக்கப்படவில்லை.
எனவே, இது தொடர்பில் அனைவரும் எச்சரிக்கையாக இருக்கவும் என்று அந்த அறிக்கையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே போலிவூட்டின் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், இலங்கைக்கு வருகை தந்து, இந்த பிரமாண்ட திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ள உள்ளார்.
இலங்கையில் ஷாருக்கான் கலந்துகொள்ளவுள்ள நிகழ்ச்சிக்கு டிக்கெட் விநியோகம் - மக்களுக்கு வந்த எச்சரிக்கை தெற்காசியாவின் முதல் ஒருங்கிணைந்த சொகுசு ரெசோர்ட்டான “சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்கா” (City of Dreams Sri Lanka) ஆகஸ்ட் 2 அன்று அதிகாரப்பூர்வமான ஆரம்ப விழா தனிப்பட்ட அழைப்பின் பேரில் மாத்திரம் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்கா,பிரமாண்டமான திறப்பு விழாவிற்கான, அங்கீகரிக்கப்படாத டிக்கெட்டுகள் விநியோகிக்கப்படுவதாக தங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிகழ்வு அழைப்பின் பேரில் மட்டுமே என்பதை நாங்கள் தெளிவுபடுத்த விரும்புகிறோம்.மேலும் எந்த மூன்றாம் தரப்பினரும் டிக்கெட்டுகளை வழங்கவோ, விநியோகிக்கவோ அல்லது விற்கவோ அங்கீகரிக்கப்படவில்லை.எனவே, இது தொடர்பில் அனைவரும் எச்சரிக்கையாக இருக்கவும் என்று அந்த அறிக்கையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.இதனிடையே போலிவூட்டின் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், இலங்கைக்கு வருகை தந்து, இந்த பிரமாண்ட திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ள உள்ளார்.