• Aug 19 2025

மலையக மக்களுக்கு சேவை செய்யும் பொறுப்பை எனக்கு வழங்கிய ஜனாதிபதிக்கு நன்றி - பெருந்தோட்ட பிரதியமைச்சர் புகழாரம்!

shanuja / Aug 19th 2025, 8:57 am
image

சபரிமலை யாத்திரையை அங்கீகரிக்கப்பட்ட புனித யாத்திரையாக அரசாங்கம் பிரகடனம் செய்துள்ளது.


இதனை அறிவிக்க சபரிமலை புனித யாத்திரை தொடர்பான கலந்துரையாடலொன்று கொழும்பு-11, செட்டியார் தெரு கல்யாண முருகன் மண்டபத்தில் நேற்றைய தினம் மாலை நடைபெற்றது.


மஹா குரு - ரவி குருசாமி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் கலந்து கொண்டதுடன் கடற்றோழில் நீரியல் வழங்கல் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரன், இந்து சமய அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் வை.அனிருத்தன் மற்றும் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சுப்பையா ஆனந்தகுமார் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.


இந்நிகழ்வில் இலங்கையிலுள்ள ஐயப்ப நாமத்தில் இயங்கும் அமைப்புக்கள், குரு சுவாமிகள் மற்றும் ஐயப்பன் தொடர்புடைய அமைப்புக்களின் உறுப்பினர்கள் என பெரும் எண்ணிக்கையிலானவர்களும் கலந்து கொண்டனர்.


இதன்போது சுவாமிமார்களால் பரிந்துரைக்கப்பட்ட ஐயப்ப மாலை அணிந்த சுவாமிமார்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் மற்றும் நெறிமுறைகள் அடங்கிய அறிக்கை சமர்ப்பிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.


நாடளாவிய ரீதியில் இருந்து வருகைதந்த ஐயப்பசாமி குருமார்களின் முக்கியஸ்தர்கள் தங்களது கருத்துக்களையும் முன்வைத்தனர்.


நிகழ்வில் உரையாற்றிய பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், மலையக மக்களுக்கு சேவை செய்யக்கூடிய பொறுப்பு வாய்ந்த அமைச்சை எனக்கு வழங்கிய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயவுக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.

மலையக மக்களுக்கு சேவை செய்யும் பொறுப்பை எனக்கு வழங்கிய ஜனாதிபதிக்கு நன்றி - பெருந்தோட்ட பிரதியமைச்சர் புகழாரம் சபரிமலை யாத்திரையை அங்கீகரிக்கப்பட்ட புனித யாத்திரையாக அரசாங்கம் பிரகடனம் செய்துள்ளது.இதனை அறிவிக்க சபரிமலை புனித யாத்திரை தொடர்பான கலந்துரையாடலொன்று கொழும்பு-11, செட்டியார் தெரு கல்யாண முருகன் மண்டபத்தில் நேற்றைய தினம் மாலை நடைபெற்றது.மஹா குரு - ரவி குருசாமி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் கலந்து கொண்டதுடன் கடற்றோழில் நீரியல் வழங்கல் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரன், இந்து சமய அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் வை.அனிருத்தன் மற்றும் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சுப்பையா ஆனந்தகுமார் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.இந்நிகழ்வில் இலங்கையிலுள்ள ஐயப்ப நாமத்தில் இயங்கும் அமைப்புக்கள், குரு சுவாமிகள் மற்றும் ஐயப்பன் தொடர்புடைய அமைப்புக்களின் உறுப்பினர்கள் என பெரும் எண்ணிக்கையிலானவர்களும் கலந்து கொண்டனர்.இதன்போது சுவாமிமார்களால் பரிந்துரைக்கப்பட்ட ஐயப்ப மாலை அணிந்த சுவாமிமார்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் மற்றும் நெறிமுறைகள் அடங்கிய அறிக்கை சமர்ப்பிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.நாடளாவிய ரீதியில் இருந்து வருகைதந்த ஐயப்பசாமி குருமார்களின் முக்கியஸ்தர்கள் தங்களது கருத்துக்களையும் முன்வைத்தனர்.நிகழ்வில் உரையாற்றிய பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், மலையக மக்களுக்கு சேவை செய்யக்கூடிய பொறுப்பு வாய்ந்த அமைச்சை எனக்கு வழங்கிய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயவுக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement