வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி ஒருவரின் நெருங்கிய சகா ஒருவர், 54 டி-56 ரகத் தோட்டாக்கள் மற்றும் ஒரு மெகசீனுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மினுவாங்கொடை - ஹீனட்டியன பகுதியைச் சேர்ந்த 25 வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று (06) அதிகாலை கட்டுநாயக்க பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹீனட்டியன பகுதியில், கெஹெல்பத்தர விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட 54 தோட்டாக்கள் மற்றும் மெகசீன் ஆகியவை வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள ஒரு குற்றவாளிக்கு சொந்தமானது எனத் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் மேலதிக விசாரணைக்காக கட்டுநாயக்க பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
தோட்டாக்கள், மெகசீனுடன் பாதாள உலகக் குழு உறுப்பினர் கைது வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி ஒருவரின் நெருங்கிய சகா ஒருவர், 54 டி-56 ரகத் தோட்டாக்கள் மற்றும் ஒரு மெகசீனுடன் கைது செய்யப்பட்டுள்ளார். மினுவாங்கொடை - ஹீனட்டியன பகுதியைச் சேர்ந்த 25 வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (06) அதிகாலை கட்டுநாயக்க பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹீனட்டியன பகுதியில், கெஹெல்பத்தர விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட 54 தோட்டாக்கள் மற்றும் மெகசீன் ஆகியவை வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள ஒரு குற்றவாளிக்கு சொந்தமானது எனத் தெரியவந்துள்ளது. சந்தேக நபர் மேலதிக விசாரணைக்காக கட்டுநாயக்க பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.