• Sep 03 2025

நாட்டில் மீண்டும் இனவாத அரசியலுக்கு இடமில்லை; வடக்கு மக்களுக்கு ஜனாதிபதி உறுதிமொழி

Chithra / Sep 2nd 2025, 1:51 pm
image

 


நாட்டில் இனவாத அரசியல் மீண்டும் தலைதூக்குவதற்கு எந்த வாய்ப்பும் வழங்கப்பட மாட்டாது என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க உறுதிப்படுத்தியுள்ளார்.

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் 'நாடே சுபிட்சமாக்கும் விருட்சம் கற்பகத்தரு வளம் உலக தெங்கு தின கொண்டாட்டம் 2025' நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் இன்று இடம்பெற்றது. 

2025 ஆம் ஆண்டு வடமாகாணத்தில் 16,000 ஏக்கரில் தென்னைப் பயிர்ச் செய்கையை மேற்கொள்ளும் நோக்கில் இத்திட்டம் ஆரம்பிக்கப்படுவதோடு, 2027 ஆம் ஆண்டளவில் இந்த எண்ணிக்கை 50,000 ஏக்கராக அதிகரிக்கப்படவுள்ளது.

இங்கு கலந்து கொண்டு உரையாற்றும் போது ஜனாதிபதி இதனை தெரிவித்தார். 

இனவாத அரசியல் ஒருபோதும் பொதுமக்களுக்கு சேவை செய்ததில்லை என்றும், இனவாதம்  அரசியல்வாதிகளால் பயன்படுத்தப்படும் ஒரு கருவியாக மட்டுமே இருந்து வருகிறது.

அத்தகைய இனவாத அரசியல் எந்த வடிவத்திலோ அல்லது இடத்திலோ எழுந்தால், மக்கள் அதை நிராகரிப்பார்கள் என்று அவர் மேலும் தெரிவித்தார். 

30 ஆண்டுகால யுத்தம் நாட்டின் வரலாற்றில் மிகப்பெரிய சோகம் என்றும், அதன் விளைவாக, அது மக்களிடையே பிளவுபட வழிவகுத்தது என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். 

வடக்கு மற்றும் தெற்கு இரண்டிலும் அதிகாரத்தைப் பெறுவதற்கு தேசியவாதம் முக்கிய கருவியாக மாறிவிட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இப்போதும் கூட, தெற்கில் உள்ள சில அரசியல் சக்திகள் மீண்டும் போர் ஏற்படும் என்ற நிலையான, நிச்சயமற்ற அச்சத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

எந்தவொரு இன மோதலையும் தடுக்க அரசாங்கம் தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும், அந்த விடயத்தில் துணிச்சலான மற்றும் தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் ஒருபோதும் தயங்காது என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

நாட்டில் மீண்டும் இனவாத அரசியலுக்கு இடமில்லை; வடக்கு மக்களுக்கு ஜனாதிபதி உறுதிமொழி  நாட்டில் இனவாத அரசியல் மீண்டும் தலைதூக்குவதற்கு எந்த வாய்ப்பும் வழங்கப்பட மாட்டாது என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க உறுதிப்படுத்தியுள்ளார்.முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் 'நாடே சுபிட்சமாக்கும் விருட்சம் கற்பகத்தரு வளம் உலக தெங்கு தின கொண்டாட்டம் 2025' நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் இன்று இடம்பெற்றது. 2025 ஆம் ஆண்டு வடமாகாணத்தில் 16,000 ஏக்கரில் தென்னைப் பயிர்ச் செய்கையை மேற்கொள்ளும் நோக்கில் இத்திட்டம் ஆரம்பிக்கப்படுவதோடு, 2027 ஆம் ஆண்டளவில் இந்த எண்ணிக்கை 50,000 ஏக்கராக அதிகரிக்கப்படவுள்ளது.இங்கு கலந்து கொண்டு உரையாற்றும் போது ஜனாதிபதி இதனை தெரிவித்தார். இனவாத அரசியல் ஒருபோதும் பொதுமக்களுக்கு சேவை செய்ததில்லை என்றும், இனவாதம்  அரசியல்வாதிகளால் பயன்படுத்தப்படும் ஒரு கருவியாக மட்டுமே இருந்து வருகிறது.அத்தகைய இனவாத அரசியல் எந்த வடிவத்திலோ அல்லது இடத்திலோ எழுந்தால், மக்கள் அதை நிராகரிப்பார்கள் என்று அவர் மேலும் தெரிவித்தார். 30 ஆண்டுகால யுத்தம் நாட்டின் வரலாற்றில் மிகப்பெரிய சோகம் என்றும், அதன் விளைவாக, அது மக்களிடையே பிளவுபட வழிவகுத்தது என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். வடக்கு மற்றும் தெற்கு இரண்டிலும் அதிகாரத்தைப் பெறுவதற்கு தேசியவாதம் முக்கிய கருவியாக மாறிவிட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.இப்போதும் கூட, தெற்கில் உள்ள சில அரசியல் சக்திகள் மீண்டும் போர் ஏற்படும் என்ற நிலையான, நிச்சயமற்ற அச்சத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாக அவர் குறிப்பிட்டார்.எந்தவொரு இன மோதலையும் தடுக்க அரசாங்கம் தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும், அந்த விடயத்தில் துணிச்சலான மற்றும் தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் ஒருபோதும் தயங்காது என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

Advertisement

Advertisement

Advertisement