• Apr 17 2026

நாட்டின் பல பகுதிகளில் இன்று மழைக்கு வாய்ப்பு; வளிமண்டலவியல் திணைக்களம் தகவல்!

Chithra / Apr 4th 2026, 8:21 am
image

நாட்டின் பெரும்பாலான பகுதிகளின் பல இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


மத்திய, சப்ரகமுவ, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் 75 mm இலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.


ஹம்பாந்தோட்டை தொடக்கம் பொத்துவில், மட்டக்களப்பு ஊடாக திருகோணமலை வரையான கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.


கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 - 30 km  வேகத்தில் தென்மேற்குத் திசையில் இருந்து அல்லது மாறுபட்ட திசைகளில் இருந்து காற்று வீசும்.


நாட்டைச் சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் மிதமான அலையுடன் காணப்படும்.


ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.


பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

நாட்டின் பல பகுதிகளில் இன்று மழைக்கு வாய்ப்பு; வளிமண்டலவியல் திணைக்களம் தகவல் நாட்டின் பெரும்பாலான பகுதிகளின் பல இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.மத்திய, சப்ரகமுவ, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் 75 mm இலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.ஹம்பாந்தோட்டை தொடக்கம் பொத்துவில், மட்டக்களப்பு ஊடாக திருகோணமலை வரையான கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 - 30 km  வேகத்தில் தென்மேற்குத் திசையில் இருந்து அல்லது மாறுபட்ட திசைகளில் இருந்து காற்று வீசும்.நாட்டைச் சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் மிதமான அலையுடன் காணப்படும்.ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement