• Aug 12 2025

மன்னார் காற்றாலைக்கு எதிராக 10வது நாளாக எழுச்சி போராட்டம்; தடை உத்தரவை பெற பொலிஸார் நடவடிக்கை

Chithra / Aug 12th 2025, 12:58 pm
image


மன்னார் மாவட்டத்தில் இடம்பெற்றுவரும் காற்றாலை மற்றும் கனியமணல் அகழ்வு திட்டங்களை உடனடியாக நிறுத்த கோரிய தார்மீக போராட்டம் இன்று 10 வது நாளாக இடம்பெற்று வருகின்றது.

மன்னார் மாவட்ட மக்கள், பொது அமைப்புக்கள், சமூக செயற்பாட்டாளர்கள் இணைந்து இப்போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். 

மன்னார் தாழ்வுபாடு கிராம மக்கள் இன்றைய தினம் சுழற்சி முறையில் கலந்து கொண்டு தங்கள் ஆதரவை போராட்ட குழுவுக்கு  வழங்கி வருகின்றனர்

நேற்றைய தினம் நள்ளிரவு குறித்த காற்றாலை செயற்திட்டங்களுக்கான பாரிய உபகரணங்கள் மன்னார் தீவுக்குள், பொலிஸார் பாதுகாப்புடன் எடுத்துவர முற்பட்ட நிலையில் போராட்டகாரர்களின் பலத்த எதிர்பின் காரணமாக காற்றாலை உபகரணங்களுடன் வருகை தந்த பார ஊர்தியினால் உள்நுழைய முடியாத நிலை ஏற்பட்டது.

அதேநேரம் பொலிஸார் அரஜகமாக குறித்த போராட்டக்காரர்களை அச்சுறுத்தி புகைப்படம் எடுத்து போராட்டகாரர்களை வெளியேற்ற முயன்றபோதும் தொடர்சியான போராட்டம் காரணமாக மன்னார் நீதிமன்ற வளகத்திற்கு முன்பாக குறித்த வாகனம் நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் குறித்த போராட்டக்காரர்களுக்கும், போராட்டத்துக்கும்  எதிராக இன்றைய தினம், மன்னார் பொலிஸார் தடை உத்தரவு ஒன்றை பெறுவதற்காக மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய உள்ளதுடன், 

குறித்த வழக்கில் போராட்டக்காரர்கள் சார்பாக சட்டத்தரனி சுமந்திரன் ஆஜராக உள்ளமை குறிப்பிடத்தக்கது


மன்னார் காற்றாலைக்கு எதிராக 10வது நாளாக எழுச்சி போராட்டம்; தடை உத்தரவை பெற பொலிஸார் நடவடிக்கை மன்னார் மாவட்டத்தில் இடம்பெற்றுவரும் காற்றாலை மற்றும் கனியமணல் அகழ்வு திட்டங்களை உடனடியாக நிறுத்த கோரிய தார்மீக போராட்டம் இன்று 10 வது நாளாக இடம்பெற்று வருகின்றது.மன்னார் மாவட்ட மக்கள், பொது அமைப்புக்கள், சமூக செயற்பாட்டாளர்கள் இணைந்து இப்போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். மன்னார் தாழ்வுபாடு கிராம மக்கள் இன்றைய தினம் சுழற்சி முறையில் கலந்து கொண்டு தங்கள் ஆதரவை போராட்ட குழுவுக்கு  வழங்கி வருகின்றனர்நேற்றைய தினம் நள்ளிரவு குறித்த காற்றாலை செயற்திட்டங்களுக்கான பாரிய உபகரணங்கள் மன்னார் தீவுக்குள், பொலிஸார் பாதுகாப்புடன் எடுத்துவர முற்பட்ட நிலையில் போராட்டகாரர்களின் பலத்த எதிர்பின் காரணமாக காற்றாலை உபகரணங்களுடன் வருகை தந்த பார ஊர்தியினால் உள்நுழைய முடியாத நிலை ஏற்பட்டது.அதேநேரம் பொலிஸார் அரஜகமாக குறித்த போராட்டக்காரர்களை அச்சுறுத்தி புகைப்படம் எடுத்து போராட்டகாரர்களை வெளியேற்ற முயன்றபோதும் தொடர்சியான போராட்டம் காரணமாக மன்னார் நீதிமன்ற வளகத்திற்கு முன்பாக குறித்த வாகனம் நிறுத்தப்பட்டது.இந்த நிலையில் குறித்த போராட்டக்காரர்களுக்கும், போராட்டத்துக்கும்  எதிராக இன்றைய தினம், மன்னார் பொலிஸார் தடை உத்தரவு ஒன்றை பெறுவதற்காக மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய உள்ளதுடன், குறித்த வழக்கில் போராட்டக்காரர்கள் சார்பாக சட்டத்தரனி சுமந்திரன் ஆஜராக உள்ளமை குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement

Advertisement