புத்தளம் - சாலியவெவ பகுதியில் குடும்பத் தகராறு ஒன்று கொடூரமான சம்பவத்தில் முடிவடைந்துள்ளது.
கும்புக்ஃகல்ல பகுதியில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் நேற்று (03) பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.
இதையடுத்து விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், உயிரிழந்தவர் 32 வயதுடைய பெண் என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.
மேலும், ஆரம்பகட்ட விசாரணைகளில் குடும்பத் தகராறு முற்றியதால் கணவரே மனைவியைக் கொலை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
ஆனால், சம்பவத்தைத் தொடர்ந்து சந்தேகநபரான கணவர் அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பெண்ணின் சடலம் நீதவான் பரிசோதனையின் பின்னர் பிரேதப் பரிசோதனைக்காக புத்தளம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
தப்பிச் சென்ற கணவரைக் கைது செய்வதற்காக சாலியவெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
குடும்பத் தகராறு விபரீதம் தலைமறைவான கணவரைத் தேடும் பொலிஸார் புத்தளம் - சாலியவெவ பகுதியில் குடும்பத் தகராறு ஒன்று கொடூரமான சம்பவத்தில் முடிவடைந்துள்ளது.கும்புக்ஃகல்ல பகுதியில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் நேற்று (03) பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.இதையடுத்து விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், உயிரிழந்தவர் 32 வயதுடைய பெண் என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.மேலும், ஆரம்பகட்ட விசாரணைகளில் குடும்பத் தகராறு முற்றியதால் கணவரே மனைவியைக் கொலை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.ஆனால், சம்பவத்தைத் தொடர்ந்து சந்தேகநபரான கணவர் அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.பெண்ணின் சடலம் நீதவான் பரிசோதனையின் பின்னர் பிரேதப் பரிசோதனைக்காக புத்தளம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.தப்பிச் சென்ற கணவரைக் கைது செய்வதற்காக சாலியவெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.