புதிய கல்விச் சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவதற்கு அமைவாக, பாடசாலைகளின் கால அட்டவணைகளைத் தயாரிப்பதற்கான வழிகாட்டுதல்களை உள்ளடக்கிய சுற்றறிக்கையொன்றை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.
கல்வி அமைச்சின் செயலாளர் நலக்க கலுவெவாவின் கையொப்பத்துடன் இந்தச் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, 2026 ஆம் ஆண்டு முதலாம் வகுப்பில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பாடத்திட்டச் சீர்திருத்தங்கள், எதிர்வரும் ஆண்டுகளில் பல்வேறு கட்டங்களாக ஏனைய வகுப்புகளுக்கும் விரிவுபடுத்தப்படவுள்ளன.
அதற்கமைய, 2027 ஆம் ஆண்டில் 2 மற்றும் 6 ஆம் வகுப்புகளுக்கும், 2028 ஆம் ஆண்டில் 3 மற்றும் 7 ஆம் வகுப்புகளுக்கும் புதிய பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.
தொடர்ந்து, 2029 ஆம் ஆண்டில் 4, 8 மற்றும் 10 ஆம் வகுப்புகளுக்கும், 2030 ஆம் ஆண்டில் 5, 9 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கும் புதிய பாடத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.
மேலும், உயர்தர வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் 2031 ஆம் ஆண்டில் 12 ஆம் வகுப்பில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதுடன், இப்பாடத்திட்டத்தின் கீழ் கல்வி பயிலும் மாணவர்கள் 2033 ஆம் ஆண்டில் முதன்முறையாக க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, புதிய கல்விச் சீர்திருத்தங்கள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் வரையிலான மாற்றக் காலப்பகுதியில், சில வகுப்புகளுக்கு தற்போதைய பாடத்திட்டமே தொடர்ந்து அமுலில் இருக்கும்.
இதன்படி, 2027 ஆம் ஆண்டில் 3, 4 மற்றும் 5 ஆம் வகுப்புகளுக்கும், 2028 ஆம் ஆண்டில் 4 மற்றும் 5 ஆம் வகுப்புகளுக்கும், 2029 ஆம் ஆண்டில் 5 ஆம் வகுப்புக்கும் தற்போதைய பாடத்திட்டம் தொடர்ந்து பின்பற்றப்படும்.
எனவே, புதிய கல்விச் சீர்திருத்தங்களைச் சுமூகமாக நடைமுறைப்படுத்தும் நோக்கில், ஒவ்வொரு கல்வி ஆண்டுக்குமான பாடத்திட்டச் செயல்பாட்டு அட்டவணையை அடிப்படையாகக் கொண்டு பாடசாலைகள் தமது கால அட்டவணைகளைத் தயாரிக்க வேண்டும் என கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
பாடசாலைகளின் கால அட்டவணை இனி எப்படி அமையும் கல்வி அமைச்சு வெளியிட்ட சுற்றறிக்கை புதிய கல்விச் சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவதற்கு அமைவாக, பாடசாலைகளின் கால அட்டவணைகளைத் தயாரிப்பதற்கான வழிகாட்டுதல்களை உள்ளடக்கிய சுற்றறிக்கையொன்றை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.கல்வி அமைச்சின் செயலாளர் நலக்க கலுவெவாவின் கையொப்பத்துடன் இந்தச் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.இதன்படி, 2026 ஆம் ஆண்டு முதலாம் வகுப்பில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பாடத்திட்டச் சீர்திருத்தங்கள், எதிர்வரும் ஆண்டுகளில் பல்வேறு கட்டங்களாக ஏனைய வகுப்புகளுக்கும் விரிவுபடுத்தப்படவுள்ளன.அதற்கமைய, 2027 ஆம் ஆண்டில் 2 மற்றும் 6 ஆம் வகுப்புகளுக்கும், 2028 ஆம் ஆண்டில் 3 மற்றும் 7 ஆம் வகுப்புகளுக்கும் புதிய பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.தொடர்ந்து, 2029 ஆம் ஆண்டில் 4, 8 மற்றும் 10 ஆம் வகுப்புகளுக்கும், 2030 ஆம் ஆண்டில் 5, 9 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கும் புதிய பாடத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.மேலும், உயர்தர வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் 2031 ஆம் ஆண்டில் 12 ஆம் வகுப்பில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதுடன், இப்பாடத்திட்டத்தின் கீழ் கல்வி பயிலும் மாணவர்கள் 2033 ஆம் ஆண்டில் முதன்முறையாக க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.இதேவேளை, புதிய கல்விச் சீர்திருத்தங்கள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் வரையிலான மாற்றக் காலப்பகுதியில், சில வகுப்புகளுக்கு தற்போதைய பாடத்திட்டமே தொடர்ந்து அமுலில் இருக்கும்.இதன்படி, 2027 ஆம் ஆண்டில் 3, 4 மற்றும் 5 ஆம் வகுப்புகளுக்கும், 2028 ஆம் ஆண்டில் 4 மற்றும் 5 ஆம் வகுப்புகளுக்கும், 2029 ஆம் ஆண்டில் 5 ஆம் வகுப்புக்கும் தற்போதைய பாடத்திட்டம் தொடர்ந்து பின்பற்றப்படும்.எனவே, புதிய கல்விச் சீர்திருத்தங்களைச் சுமூகமாக நடைமுறைப்படுத்தும் நோக்கில், ஒவ்வொரு கல்வி ஆண்டுக்குமான பாடத்திட்டச் செயல்பாட்டு அட்டவணையை அடிப்படையாகக் கொண்டு பாடசாலைகள் தமது கால அட்டவணைகளைத் தயாரிக்க வேண்டும் என கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.