• Aug 07 2025

செம்மணி உடைமைகளை அடையாளம் காணும் தீர்மானத்தை வரவேற்றுள்ள ஐ.நா.சபை

UN
Chithra / Aug 6th 2025, 9:24 am
image


செம்மணி மற்றும் கொக்குத்தொடுவாய் கூட்டுப் புதைகுழி தளங்களிலிருந்து மீட்கப்பட்ட தனிப்பட்ட உடைமைகளை அடையாளம் காணப்பதில் பொது மக்களின் உதவியை நாடும் தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை அலுவலகம் தெரிவித்துள்ளது. 

அறிக்கையொன்றின் மூலம் அலுவலகம் இதனை தெரிவித்துள்ளது. 

'செம்மணி, கொக்குத்தொடுவாய் கூட்டுப் புதைகுழி தளங்களிலிருந்து மீட்கப்பட்ட தனிப்பட்ட உடைமைகளை அடையாளம் காணப்பதில் பொது மக்களின் உதவியை நாடும் தீர்மானம் இலங்கையில் உண்மை மற்றும் நீதி நல்லிணக்கத்தை நோக்கிய ஒரு குறிப்பிடத்தக்க மற்றும் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட ஒரு நடவடிக்கையாகும். 

பல தசாப்தங்களாக தங்கள் அன்புக்குரியவர்களின் நிலை குறித்து அயராது திடமாக பதில்களைத் தேடி வரும் காணாமல் போனவர்களின் குடும்பங்களுடன் ஐக்கிய நாடுகள் இலங்கை உறுதியாக நிற்கிறது.  

நீதி மற்றும் உண்மையைப் பின் தொடர்வதில் அவர்களின் தாங்குதன்மை ஒரு தார்மீக வழிகாட்டியாக தொடர்ந்து செயல்படுகிறது. 

இலங்கை அரசாங்கம், குறிப்பாக காணாமல் போனோர் அலுவலகம், தங்கள் பணியை வெளிப்படைத் தன்மையுடனும் விரைவுடனும் காணாமல் போனவர்களின் குடும்பங்களுடன் அர்த்தமுள்ள ஆலோசனையுடனும் நிறைவேற்ற வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

செம்மணி உடைமைகளை அடையாளம் காணும் தீர்மானத்தை வரவேற்றுள்ள ஐ.நா.சபை செம்மணி மற்றும் கொக்குத்தொடுவாய் கூட்டுப் புதைகுழி தளங்களிலிருந்து மீட்கப்பட்ட தனிப்பட்ட உடைமைகளை அடையாளம் காணப்பதில் பொது மக்களின் உதவியை நாடும் தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை அலுவலகம் தெரிவித்துள்ளது. அறிக்கையொன்றின் மூலம் அலுவலகம் இதனை தெரிவித்துள்ளது. 'செம்மணி, கொக்குத்தொடுவாய் கூட்டுப் புதைகுழி தளங்களிலிருந்து மீட்கப்பட்ட தனிப்பட்ட உடைமைகளை அடையாளம் காணப்பதில் பொது மக்களின் உதவியை நாடும் தீர்மானம் இலங்கையில் உண்மை மற்றும் நீதி நல்லிணக்கத்தை நோக்கிய ஒரு குறிப்பிடத்தக்க மற்றும் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட ஒரு நடவடிக்கையாகும். பல தசாப்தங்களாக தங்கள் அன்புக்குரியவர்களின் நிலை குறித்து அயராது திடமாக பதில்களைத் தேடி வரும் காணாமல் போனவர்களின் குடும்பங்களுடன் ஐக்கிய நாடுகள் இலங்கை உறுதியாக நிற்கிறது.  நீதி மற்றும் உண்மையைப் பின் தொடர்வதில் அவர்களின் தாங்குதன்மை ஒரு தார்மீக வழிகாட்டியாக தொடர்ந்து செயல்படுகிறது. இலங்கை அரசாங்கம், குறிப்பாக காணாமல் போனோர் அலுவலகம், தங்கள் பணியை வெளிப்படைத் தன்மையுடனும் விரைவுடனும் காணாமல் போனவர்களின் குடும்பங்களுடன் அர்த்தமுள்ள ஆலோசனையுடனும் நிறைவேற்ற வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement