• Aug 28 2025

தம்மை தற்காத்துக்கொள்ள கூட்டு சேர்ந்துள்ள கள்வர்கள்; மீன்பிடி அமைச்சர் கருத்து

Chithra / Aug 27th 2025, 3:12 pm
image

சட்டம் தனது கடமையை சரிவர செய்யும்போதுஇ குறுகிய அரசியல் நோக்கங்களுக்காகவே கூட்டணி அமைத்து, அரசியல் பழிவாங்கல் புராணத்தை எதிரணிகள் ஓதி வருகின்றன என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

மைத்திரி, மஹிந்த மற்றும் சஜித் தரப்புகள் ஜனநாயகம் பற்றி பேசுவது, சாத்தான் வேதம் ஓதுவதற்கு ஒப்பானதாகும் எனவும் தெரிவித்தார். 

வவுனியாப் பல்கலைக்கழகத்தின் வியாபார இணைப்பு அலகும், முயற்சியாண்மைக் கற்கைநெறி மாணவர்களும் இணைந்து நடத்திய உலக முயற்சியாளர் தின விழாவும், மாபெரும் வர்த்தக சந்தையும் பல்கலைக்கழகத்தில் நேற்று சிறப்பாக நடைபெற்றது.

நடைபெற்ற நிகழ்வில் அமைச்சர் பங்கேற்றிருந்தார். இந்நிகழ்வின் பின்னர் சமகால அரசியல் நிலவரங்கள் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தேங்காய் திருடினாலும் குற்றம்தான், மாங்காய் திருடினாலும் குற்றம்தான். டயமன்ட் திருடினாலும் குற்றம்தான். எனவே, அது சிறிய குற்றம், இது பெரிய குற்றம் என குற்றத்தை பிரித்து பார்ப்பதுகூட குற்றம்தான்.

கடந்தகாலங்களில் ஊழல், மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்டம் தற்போது செயற்பட ஆரம்பித்துள்ளது. 

எனவேதான் தம்மை தற்காத்துக்கொள்வதற்காக கள்வர்கள் கூட்டு சேர்ந்துள்ளனர். இது ஜனநாயகத்துக்கான கூட்டணி அல்ல. மாறாக கள்வர்களை காப்பதற்கான கூட்டணியாகும்.

ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்தவர்கள், ஜனநாயகம் பற்றி கதைப்பது சாத்தான் வேதம் ஓதுவதற்கு ஒப்பான செயலாகும். நாட்டில் இன்று நீதி கட்டமைப்பு சுயாதீனமாக செயற்படுகின்றது. எவ்வித அரசியல் தலையீடுகளும் இல்லை. - என்றார்.

தம்மை தற்காத்துக்கொள்ள கூட்டு சேர்ந்துள்ள கள்வர்கள்; மீன்பிடி அமைச்சர் கருத்து சட்டம் தனது கடமையை சரிவர செய்யும்போதுஇ குறுகிய அரசியல் நோக்கங்களுக்காகவே கூட்டணி அமைத்து, அரசியல் பழிவாங்கல் புராணத்தை எதிரணிகள் ஓதி வருகின்றன என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.மைத்திரி, மஹிந்த மற்றும் சஜித் தரப்புகள் ஜனநாயகம் பற்றி பேசுவது, சாத்தான் வேதம் ஓதுவதற்கு ஒப்பானதாகும் எனவும் தெரிவித்தார். வவுனியாப் பல்கலைக்கழகத்தின் வியாபார இணைப்பு அலகும், முயற்சியாண்மைக் கற்கைநெறி மாணவர்களும் இணைந்து நடத்திய உலக முயற்சியாளர் தின விழாவும், மாபெரும் வர்த்தக சந்தையும் பல்கலைக்கழகத்தில் நேற்று சிறப்பாக நடைபெற்றது.நடைபெற்ற நிகழ்வில் அமைச்சர் பங்கேற்றிருந்தார். இந்நிகழ்வின் பின்னர் சமகால அரசியல் நிலவரங்கள் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.தேங்காய் திருடினாலும் குற்றம்தான், மாங்காய் திருடினாலும் குற்றம்தான். டயமன்ட் திருடினாலும் குற்றம்தான். எனவே, அது சிறிய குற்றம், இது பெரிய குற்றம் என குற்றத்தை பிரித்து பார்ப்பதுகூட குற்றம்தான்.கடந்தகாலங்களில் ஊழல், மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்டம் தற்போது செயற்பட ஆரம்பித்துள்ளது. எனவேதான் தம்மை தற்காத்துக்கொள்வதற்காக கள்வர்கள் கூட்டு சேர்ந்துள்ளனர். இது ஜனநாயகத்துக்கான கூட்டணி அல்ல. மாறாக கள்வர்களை காப்பதற்கான கூட்டணியாகும்.ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்தவர்கள், ஜனநாயகம் பற்றி கதைப்பது சாத்தான் வேதம் ஓதுவதற்கு ஒப்பான செயலாகும். நாட்டில் இன்று நீதி கட்டமைப்பு சுயாதீனமாக செயற்படுகின்றது. எவ்வித அரசியல் தலையீடுகளும் இல்லை. - என்றார்.

Advertisement

Advertisement

Advertisement