நாட்டின் பல பகுதிகளில் இன்று வெப்பநிலை அதிகரித்த மட்டத்தில் நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்கள் மற்றும் ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் உள்ள சில பகுதிகளில் வெப்பக் குறியீடானது மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை,
எச்சரிக்கை மட்டத்தில் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை வடக்கு, வடமத்திய, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் அடுத்த சில நாட்களுக்கு மாலை நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இன்று எச்சரிக்கை மட்டத்தில் வெப்பநிலை நாட்டின் பல பகுதிகளில் இன்று வெப்பநிலை அதிகரித்த மட்டத்தில் நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்கள் மற்றும் ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் உள்ள சில பகுதிகளில் வெப்பக் குறியீடானது மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை, எச்சரிக்கை மட்டத்தில் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.இதேவேளை வடக்கு, வடமத்திய, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் அடுத்த சில நாட்களுக்கு மாலை நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும்.இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.