• Aug 19 2025

இலங்கையில் வீதிகளில் கைவிடப்பட்ட 300 சிறுவர்கள் கண்டுபிடிப்பு

Chithra / Aug 19th 2025, 1:03 pm
image

 

ஒரு மாதத்திற்குள் வீட்டு வேலைகளுக்கு அமர்த்தப்பட்ட மற்றும் வீதிகளில் கைவிடப்பட்ட 300 சிறுவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ் தெரிவித்துள்ளார். 

அவர்களில் 26 சிறுவர்கள் கொழும்பு மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். 

சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், குறித்த சிறுவர்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அவர்களின் பராமரிப்பையும், பாதுகாப்பையும் உறுதி செய்யக்கூடிய பாதுகாவலர்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அவர்களிடம் குறித்த சிறுவர்கள் ஒப்படைக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார். 

மேலும் குறித்த சிறுவர்களின் பாடசாலை கல்விச் செயல்பாடுகளை முறையாகப் பராமரிக்கவும், அதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவும் அரசாங்கம் பொறுப்பேற்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். 

இந்த சிறுவர்களை வீட்டு வேலைகளுக்குப் பயன்படுத்தியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இவ்வாறான நடவடிக்கைகளைத் தடுக்க சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தொடர்ந்து கண்காணித்து வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.

இலங்கையில் வீதிகளில் கைவிடப்பட்ட 300 சிறுவர்கள் கண்டுபிடிப்பு  ஒரு மாதத்திற்குள் வீட்டு வேலைகளுக்கு அமர்த்தப்பட்ட மற்றும் வீதிகளில் கைவிடப்பட்ட 300 சிறுவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ் தெரிவித்துள்ளார். அவர்களில் 26 சிறுவர்கள் கொழும்பு மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், குறித்த சிறுவர்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அவர்களின் பராமரிப்பையும், பாதுகாப்பையும் உறுதி செய்யக்கூடிய பாதுகாவலர்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அவர்களிடம் குறித்த சிறுவர்கள் ஒப்படைக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார். மேலும் குறித்த சிறுவர்களின் பாடசாலை கல்விச் செயல்பாடுகளை முறையாகப் பராமரிக்கவும், அதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவும் அரசாங்கம் பொறுப்பேற்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். இந்த சிறுவர்களை வீட்டு வேலைகளுக்குப் பயன்படுத்தியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இவ்வாறான நடவடிக்கைகளைத் தடுக்க சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தொடர்ந்து கண்காணித்து வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement