• May 10 2025

மாணவியின் மரணத்திற்கு காரணமானவருக்கு உச்ச தண்டனை வழங்கப்பட வேண்டும்- இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்!

Chithra / May 9th 2025, 10:25 pm
image



கொழும்பு இராமநாதன் கல்லூரி மாணவியின் மரணத்திற்கு காரணமானவருக்கு உச்ச தண்டனை வழங்க வேண்டும் என  அகில  இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கமானது அறிக்கை  ஒன்றின் மூலம் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளது.  

அதில் யாழ்ப்பாணம் புங்குடுதீவில் மாணவி வித்தியா கோரமாகக் கொலைசெய்யப்பட்போது இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் பல்லாயிரம்பேரை ஒன்றுதிரட்டி குற்றவாளிகளுக்கு தண்டனைவழங்க பேரணி நடாத்தியதை யாவரும் அறிவர். 

அதேபோன்று இலங்கையின் தலை நகர் பகுதி கொழும்பில் தமிழ் மாணவியொருவர் பரிதாபமாகக் கொல்லப்பட்டிருக்கின்றார்.

இதனை பலரும் மூடி மறைத்து குறித்த குற்றவாளிக்கு வெறும் இடமாற்றம் மட்டும் வழங்கப்பட்டிருக்கின்றது.

எனவே இராமநாதன் மகளிர் கல்லூரியில் சில ஆசிரியர்கள் இடமாற்றம் வழங்கப்பட்டாலும் ஆசிரிய சங்கத்தின் அனுசரணையோடு பல ஆண்டுகள் அங்கேயே பணியாற்றுகின்றனர். இது உண்மை. இந்த கொலைச் சம்பவத்தையும் அதே நபர்கள் மூடி மறைக்க முனைந்துள்ளனர்.

 எனவே குற்றவாளியாகக் காணப்படுபவர் ஆசிரிய சங்கம் ஒன்றில் மிகவும் செல்வாக்கு மிக்கவர்.

என்பதாலேயே ஏற்கனவே இவர் இழைத்த குற்றத்திற்கு தண்டனை வழங்கப்படவில்லை. 

மேலும் இது போன்று சில மாவட்டங்களிலும் சிலர் பாதுகாக்கப்படுகின்றனர்.

எதுவாயினும் ஒரு பிள்ளையின் மரணத்திற்கு ஒரு ஆசிரியர் காரணமாக இருந்தால் அவருக்கு மரண தண்டனை வழங்கப்படவேண்டும். 

ஆகையால் அந்த  குற்றவாளிக்குத் தண்டனை வழங்கப்படும் அதேவேளை உடந்தையானவர்களை தெரியப்படுத்தி  அவர்களுக்கும் தண்டனை வழங்க வேண்டும்.

என கேட்டுக்கொள்கின்றோம் என அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது .

மாணவியின் மரணத்திற்கு காரணமானவருக்கு உச்ச தண்டனை வழங்கப்பட வேண்டும்- இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் கொழும்பு இராமநாதன் கல்லூரி மாணவியின் மரணத்திற்கு காரணமானவருக்கு உச்ச தண்டனை வழங்க வேண்டும் என  அகில  இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கமானது அறிக்கை  ஒன்றின் மூலம் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளது.  அதில் யாழ்ப்பாணம் புங்குடுதீவில் மாணவி வித்தியா கோரமாகக் கொலைசெய்யப்பட்போது இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் பல்லாயிரம்பேரை ஒன்றுதிரட்டி குற்றவாளிகளுக்கு தண்டனைவழங்க பேரணி நடாத்தியதை யாவரும் அறிவர். அதேபோன்று இலங்கையின் தலை நகர் பகுதி கொழும்பில் தமிழ் மாணவியொருவர் பரிதாபமாகக் கொல்லப்பட்டிருக்கின்றார்.இதனை பலரும் மூடி மறைத்து குறித்த குற்றவாளிக்கு வெறும் இடமாற்றம் மட்டும் வழங்கப்பட்டிருக்கின்றது.எனவே இராமநாதன் மகளிர் கல்லூரியில் சில ஆசிரியர்கள் இடமாற்றம் வழங்கப்பட்டாலும் ஆசிரிய சங்கத்தின் அனுசரணையோடு பல ஆண்டுகள் அங்கேயே பணியாற்றுகின்றனர். இது உண்மை. இந்த கொலைச் சம்பவத்தையும் அதே நபர்கள் மூடி மறைக்க முனைந்துள்ளனர். எனவே குற்றவாளியாகக் காணப்படுபவர் ஆசிரிய சங்கம் ஒன்றில் மிகவும் செல்வாக்கு மிக்கவர்.என்பதாலேயே ஏற்கனவே இவர் இழைத்த குற்றத்திற்கு தண்டனை வழங்கப்படவில்லை. மேலும் இது போன்று சில மாவட்டங்களிலும் சிலர் பாதுகாக்கப்படுகின்றனர்.எதுவாயினும் ஒரு பிள்ளையின் மரணத்திற்கு ஒரு ஆசிரியர் காரணமாக இருந்தால் அவருக்கு மரண தண்டனை வழங்கப்படவேண்டும். ஆகையால் அந்த  குற்றவாளிக்குத் தண்டனை வழங்கப்படும் அதேவேளை உடந்தையானவர்களை தெரியப்படுத்தி  அவர்களுக்கும் தண்டனை வழங்க வேண்டும்.என கேட்டுக்கொள்கின்றோம் என அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது .

Advertisement

Advertisement

Advertisement