• Jul 09 2025

மல்லாவி மத்திய கல்லூரியில் கிளீன் ஸ்ரீலங்கா நிகழ்ச்சி திட்டம்!

shanuja / Jul 9th 2025, 12:44 pm
image

தூய்மையான நாட்டை கட்டியெழுப்பும் வகையில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் துணுக்காய் - மல்லாவி மத்திய கல்லூரியில்  முன்னெடுக்கப்பட்டது. 


இன்று காலை கிளீன் ஸ்ரீலங்கா நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ், பாடசாலை மாணவர்களால் சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. 


பாடசாலை சமூகம் மற்றும் பழைய மாணவர் சங்கத்தின் ஒத்துழைப்புடன் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.


பாடசாலையின் வளாகம் தூய்மைப்படுத்தப்பட்டதுடன் நுளம்பு பெருக்கத்திற்கு ஏதுவாக இருந்த பகுதிகளும் இனங்காணப்பட்டு அழிக்கப்பட்டன.


பாடசாலையினை சூழவுள்ள பகுதிகளும் தூய்மைப்படுத்தப்பட்டதுடன் கழிவுப்பொருட்களும் சுற்றுச்சூழலில் இருந்த பிளாஸ்டிக் பொருட்களும்  அகற்றப்பட்டன. அத்துடன்  மர நடுகை செயற்றிட்டமும் முன்னெடுக்கப்பட்டது  


கல்லூரியின் அதிபர் தம்பிஐயா  தருமராஜா தலைமையில் நடைபெற்ற  நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர். 

மல்லாவி மத்திய கல்லூரியில் கிளீன் ஸ்ரீலங்கா நிகழ்ச்சி திட்டம் தூய்மையான நாட்டை கட்டியெழுப்பும் வகையில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் துணுக்காய் - மல்லாவி மத்திய கல்லூரியில்  முன்னெடுக்கப்பட்டது. இன்று காலை கிளீன் ஸ்ரீலங்கா நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ், பாடசாலை மாணவர்களால் சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. பாடசாலை சமூகம் மற்றும் பழைய மாணவர் சங்கத்தின் ஒத்துழைப்புடன் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.பாடசாலையின் வளாகம் தூய்மைப்படுத்தப்பட்டதுடன் நுளம்பு பெருக்கத்திற்கு ஏதுவாக இருந்த பகுதிகளும் இனங்காணப்பட்டு அழிக்கப்பட்டன.பாடசாலையினை சூழவுள்ள பகுதிகளும் தூய்மைப்படுத்தப்பட்டதுடன் கழிவுப்பொருட்களும் சுற்றுச்சூழலில் இருந்த பிளாஸ்டிக் பொருட்களும்  அகற்றப்பட்டன. அத்துடன்  மர நடுகை செயற்றிட்டமும் முன்னெடுக்கப்பட்டது  கல்லூரியின் அதிபர் தம்பிஐயா  தருமராஜா தலைமையில் நடைபெற்ற  நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர். 

Advertisement

Advertisement

Advertisement