எமது கட்சியில் ஏற்பட்ட பிளவு காரணமாகவே தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தது. அடுத்த தேர்தலில் அரசாங்கத்தை தோற்கடிப்போம் என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அரசாங்கம் தேர்தல் காலத்தில் மக்களுக்கு வழங்குவதாக தெரிவித்த எதனையும் வழங்கவில்லை. அதேநேரம் செய்ய மாட்டோம் என்ற விடயங்களையே அதிகம் செய்துள்ளது.
இன்று மக்களுக்கு வாழ்க்கைச் செலவை தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று புதிய வரிகளையும் அறிமுகப்படுத்தி மக்கள் மீீது சுமைகளை அதிகரித்துள்ளது.
அதனால் இந்த அரசாங்கம் ஒரு தவணை காலமே ஆட்சியில் இருக்கும். எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டு, அடுத்த தேர்தலில் அரசாங்கத்தை தோற்கடிப்போம்.
அநுர மீட்டர் சுழலுவதில்லை. அதனாலே அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 9 மாத காலத்தில் நூற்றுக்கு 5 வீதமான வாக்குறுதிகளையே நிறைவேற்றி இருக்கிறது என்றார்.
எமது கட்சியில் ஏற்பட்ட பிளவு காரணமாகவே தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தது - ஹர்ஷண சீற்றம் எமது கட்சியில் ஏற்பட்ட பிளவு காரணமாகவே தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தது. அடுத்த தேர்தலில் அரசாங்கத்தை தோற்கடிப்போம் என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா தெரிவித்தார்.ஐக்கிய மக்கள் சக்தி கட்சி காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.அரசாங்கம் தேர்தல் காலத்தில் மக்களுக்கு வழங்குவதாக தெரிவித்த எதனையும் வழங்கவில்லை. அதேநேரம் செய்ய மாட்டோம் என்ற விடயங்களையே அதிகம் செய்துள்ளது. இன்று மக்களுக்கு வாழ்க்கைச் செலவை தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று புதிய வரிகளையும் அறிமுகப்படுத்தி மக்கள் மீீது சுமைகளை அதிகரித்துள்ளது. அதனால் இந்த அரசாங்கம் ஒரு தவணை காலமே ஆட்சியில் இருக்கும். எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டு, அடுத்த தேர்தலில் அரசாங்கத்தை தோற்கடிப்போம்.அநுர மீட்டர் சுழலுவதில்லை. அதனாலே அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 9 மாத காலத்தில் நூற்றுக்கு 5 வீதமான வாக்குறுதிகளையே நிறைவேற்றி இருக்கிறது என்றார்.