குண்டுத்தாக்குதல் தொடர்பில் இதுவரை காலமும் வெளியாகாத பல விடயங்கள் தற்போது வெளிவந்துள்ள நிலையில் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் பலர் வெகுவிரைவில் கைது செய்யப்படுவார்கள் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இதனை குறிப்பிட்டார்.
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் விவகாரம் மற்றும் ஏனைய குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு இராஜதந்திர மட்டத்தில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
குண்டுத்தாக்குதல் தொடர்பில் இதுவரை காலமும் வெளியாகாத பல விடயங்கள் தற்போதைய விசாரணைகளின் ஊடாக வெளிவந்துள்ளன. அவற்றில் ஒரு பகுதியையே பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அண்மையில் பாராளுமன்றத்தில் குறிப்பிட்டார்.
குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் நிறைவடையவில்லை. விசாரணைகள் நிறைவுபடுத்தப்பட்டு வெகுவிரைவில் நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றார்.
மேலும் அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்ட விடயங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதன் பின்னரே தீர்வை வரி 30 சதவீதமாக குறைக்கப்பட்டது.
இந்த வரிக்குறைப்பை அடிப்படையாகக் கொண்டு இராஜதந்திர மட்டத்தில் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம்
அமெரிக்காவின் தீர்வை வரி மேலும் எத்தனை சதவீதத்தால் குறைவடையும் என்று நிதியமைச்சினாலோ அல்லது அரசாங்கத்தினாலோ குறிப்பிட முடியாது. என்று தெரிவித்தார்.
இதேவேளை டிஜிட்டல் தேசிய ஆடையாள அட்டை செயற்திட்டத்தின் ஊடாக நாட்டு மக்களின் தனிப்பட்ட தரவுகள் இந்தியாவுக்கு வழங்கப்படும் என்று குறிப்பிடப்படுவது முற்றிலும் பொய்யானது.
சுவசெரிய அம்புலன்ஸ் சேவை அமுல்படுத்தப்பட்ட போதும் விமல் வீரவன்ச இவ்வாறு தான் குறிப்பிட்டார்.
டிஜிட்டல் தேசிய அடையாள அட்டை செயற்திட்டத்துக்கு இந்தியாவின் நன்கொடை கிடைத்துள்ளது. விலைமனுக்கோரல் விடயத்தில் இந்தியா ஒருபோதும் அழுத்தம் பிரயோகிக்கவில்லை.
குற்றச்சாட்டுக்களை முன்வைப்பவர்கள் நீதிமன்றத்தை நாடலாம் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
சர்வதேச மட்டத்தில் வெகுவிரைவில் பலர் கைது செய்யப்படுவர் - அமைச்சர் நளிந்த சுட்டிக்காட்டு குண்டுத்தாக்குதல் தொடர்பில் இதுவரை காலமும் வெளியாகாத பல விடயங்கள் தற்போது வெளிவந்துள்ள நிலையில் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் பலர் வெகுவிரைவில் கைது செய்யப்படுவார்கள் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இதனை குறிப்பிட்டார்.உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் விவகாரம் மற்றும் ஏனைய குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு இராஜதந்திர மட்டத்தில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.குண்டுத்தாக்குதல் தொடர்பில் இதுவரை காலமும் வெளியாகாத பல விடயங்கள் தற்போதைய விசாரணைகளின் ஊடாக வெளிவந்துள்ளன. அவற்றில் ஒரு பகுதியையே பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அண்மையில் பாராளுமன்றத்தில் குறிப்பிட்டார்.குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் நிறைவடையவில்லை. விசாரணைகள் நிறைவுபடுத்தப்பட்டு வெகுவிரைவில் நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றார்.மேலும் அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்ட விடயங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதன் பின்னரே தீர்வை வரி 30 சதவீதமாக குறைக்கப்பட்டது. இந்த வரிக்குறைப்பை அடிப்படையாகக் கொண்டு இராஜதந்திர மட்டத்தில் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம் அமெரிக்காவின் தீர்வை வரி மேலும் எத்தனை சதவீதத்தால் குறைவடையும் என்று நிதியமைச்சினாலோ அல்லது அரசாங்கத்தினாலோ குறிப்பிட முடியாது. என்று தெரிவித்தார்.இதேவேளை டிஜிட்டல் தேசிய ஆடையாள அட்டை செயற்திட்டத்தின் ஊடாக நாட்டு மக்களின் தனிப்பட்ட தரவுகள் இந்தியாவுக்கு வழங்கப்படும் என்று குறிப்பிடப்படுவது முற்றிலும் பொய்யானது. சுவசெரிய அம்புலன்ஸ் சேவை அமுல்படுத்தப்பட்ட போதும் விமல் வீரவன்ச இவ்வாறு தான் குறிப்பிட்டார். டிஜிட்டல் தேசிய அடையாள அட்டை செயற்திட்டத்துக்கு இந்தியாவின் நன்கொடை கிடைத்துள்ளது. விலைமனுக்கோரல் விடயத்தில் இந்தியா ஒருபோதும் அழுத்தம் பிரயோகிக்கவில்லை. குற்றச்சாட்டுக்களை முன்வைப்பவர்கள் நீதிமன்றத்தை நாடலாம் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.