• May 29 2025

தொடரும் மழையால் திறக்கப்பட்ட வான் கதவுகள் - மண்சரிவு அபாய எச்சரிக்கையும் நீடிப்பு!

Chithra / May 28th 2025, 1:14 pm
image


தொடர்ந்து பெய்து வரும் மழையைக் கருத்தில் கொண்டு, இன்று (28) காலை பொல்கொல்ல மகாவலி அணையின் 03 வான் கதவுகளை தலா 18 அங்குலம் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்துவதற்காக இவ்வாறு வான் கதவுகள் திறக்கப்பட்டதாக பொல்கொல்ல மகாவலி அணையின் பொறியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. 

இதன் காரணமாக, வினாடிக்கு 4500 கன அடி நீர் கொள்ளளவு விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு வெளியேற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்  நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக காலி,களுத்துறை, கண்டி, கேகாலை ஆகிய நான்கு  மாவட்டங்களுக்கான முதலாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கையானது இன்று  காலை  முதல் நாளை காலை 10.00 மணி வரை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

தொடரும் மழையால் திறக்கப்பட்ட வான் கதவுகள் - மண்சரிவு அபாய எச்சரிக்கையும் நீடிப்பு தொடர்ந்து பெய்து வரும் மழையைக் கருத்தில் கொண்டு, இன்று (28) காலை பொல்கொல்ல மகாவலி அணையின் 03 வான் கதவுகளை தலா 18 அங்குலம் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்துவதற்காக இவ்வாறு வான் கதவுகள் திறக்கப்பட்டதாக பொல்கொல்ல மகாவலி அணையின் பொறியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, வினாடிக்கு 4500 கன அடி நீர் கொள்ளளவு விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு வெளியேற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில்  நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக காலி,களுத்துறை, கண்டி, கேகாலை ஆகிய நான்கு  மாவட்டங்களுக்கான முதலாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கையானது இன்று  காலை  முதல் நாளை காலை 10.00 மணி வரை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement