• Sep 30 2026

பிஸ்கட், சொக்லேட் உறைகளுக்குள் மறைந்திருந்த அதிர்ச்சி! - கட்டுநாயக்கவில் தொழிலதிபர் சிக்கியது எப்படி?

Chithra / Sep 30th 2026, 11:43 am
image


ஓமானில் இருந்து நாடு திரும்பிய  இலங்கை தொழிலதிபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.


ரத்மலானை, ஜயமாவத்தை பகுதியைச் சேர்ந்த வர்த்தகர், ஓமானில் இருந்து தோஹா ஊடாக கட்டுநாயக்க விமான நிலையத்தை நேற்று (30) இரவு 7.30 மணியளவில் வந்தடைந்துள்ளார்.


பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், 

அவரது பயணப் பொதியில் இருந்து 8 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான 3 கிலோ 994 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.


10 பொதிகளாக தயார் செய்யப்பட்டிருந்த போதைப்பொருள், பிஸ்கட் மற்றும் சொக்லேட் உறைகளுக்குள் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 

34 வயதுடைய இலங்கையர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.


சந்தேகநபர் இன்று (30) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.


மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.


பிஸ்கட், சொக்லேட் உறைகளுக்குள் மறைந்திருந்த அதிர்ச்சி - கட்டுநாயக்கவில் தொழிலதிபர் சிக்கியது எப்படி ஓமானில் இருந்து நாடு திரும்பிய  இலங்கை தொழிலதிபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.ரத்மலானை, ஜயமாவத்தை பகுதியைச் சேர்ந்த வர்த்தகர், ஓமானில் இருந்து தோஹா ஊடாக கட்டுநாயக்க விமான நிலையத்தை நேற்று (30) இரவு 7.30 மணியளவில் வந்தடைந்துள்ளார்.பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், அவரது பயணப் பொதியில் இருந்து 8 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான 3 கிலோ 994 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.10 பொதிகளாக தயார் செய்யப்பட்டிருந்த போதைப்பொருள், பிஸ்கட் மற்றும் சொக்லேட் உறைகளுக்குள் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 34 வயதுடைய இலங்கையர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேகநபர் இன்று (30) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement