• Apr 15 2026

பொது மக்களின் பிரச்சினைகள் தாமதமின்றி தீர்த்து வைக்கப்படும் -மஸ்கெலியா பிரதேச சபைத் தலைவர் தெரிவிப்பு!

shanu / Jan 29th 2026, 12:38 pm
image

மஸ்கெலியா பிரதேச சபையின் ஊடாக போது மக்களின் பிரச்சினைகள் மற்றும் தேவைகள் கால தாமதமின்றி நிறைவேற்றிக் கொடுக்கப்படும் என மஸ்கெலியா பிரதேச சபைத் தலைவர் கே. ராஜ்குமார் தெரிவித்தார்.   


பிரதேச சபையின் நவீன மயப்படுத்தப்பட்ட புதிய அலுவலகம் சம்பந்தமாக  (28) நேற்று கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.  அவர்  மேலும் கூறுகையில்,


மிகவும் வசதி குறைந்த நிலையில் காணப்பட்ட பிரதேச சபைத் தலைவரின் அலுவலகம் பொது மக்கள் தாராளமாக அமர்ந்து சந்தித்துக் கதைக்கக் கூடிய வகையில் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தை சாதாரண ஒரு பெண் தொழிலாளி ஒருவரைக் கொண்டு திறந்து வைத்துள்ளோம்.


மேலும் தேவை கருதி இங்கு வருகை தரும் மக்களுக்கு தேநீர் உபசாரம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்தோடு அவர்களின் தேவைகள் கால தாமதமின்றி உடனுக்குடன் நிறைவேற்றிக் கொடுக்குமாறு உத்தியோகத்தர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. மறைப்பதும் இருந்தால் எனது கவனத்துக்குக் கொண்டு வரலாம்.  


எமது பிரதேச சபையின் 10  வட்டாரங்களைச் சேர்ந்த 17 உறுப்பினர்களுக்கும் 2025 வரவு செலவுத் திட்டத்தில் தலா ஒரு இலட்ச ரூபா நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. அந்தத் தொகை 2026 இல் ஒவ்வொரு உறுப்பினருக்கும் 3½  இலட்சமாக அதிகரிக்கப்ப்டவுள்ளதால், தமது வட்டாரங்களில் கூடுதலான அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ளக் கூடியதாக இருக்கும். மேலும், இந்த ஆண்டில் முதன் முறையாக முன்பள்ளி அபிவிருத்திக்கு பிரதேச சபையின் ஊடாக பாரிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது இம்முறை சிவனொளிபாதமலைக்கு வருகை தரும் யாத்திரிகர்களின் எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. யாத்திரிகர்களின் நலன் கருதி, வாகனத் தரிப்பிடம், குடிநீர், மலசல கூட வசதிகள் உட்பட தற்காலிகக் கடைகள் பல திறக்கப்பட்டுள்ள போதிலும் வார இறுதி நாட்களைத் தவிர ஏனைய நாட்களில் யாத்திரிகர்கள் மிகவும் குறைவாகவே வந்து போகின்றார்கள்.


கடந்த ஆண்டு இறுதியில் ஏற்பட்ட மழை வெள்ளம், புயல் மற்றும் மண்சரிவு காரணமாக ஏற்பட்ட போக்குவரத்துத் தடைகளும் புகையிரத சேவை இடம்பெறாமல் உள்ளமையும் பிரதான காரணங்களாகும். எனினும், அடுத்த மாதத்திலிருந்து யாத்திரிகர் வ்ருகையில் முனேற்றம் ஏற்படுமென்று எதிர்பார்க்கப்படுகின்றது. 


அவர்களுக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க பிரதேச சபை தயாராக இருக்கின்றது. இலங்கை போக்குவரத்துச் சபை நல்லதண்ணீர்-அட்டன் புகையிரத இணைப்பு பஸ் சேவையை வழங்கும். தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை நல்லதண்ணீர் பொலிஸ் நிலையம் மேற்கொள்ளும் என்றார்.

பொது மக்களின் பிரச்சினைகள் தாமதமின்றி தீர்த்து வைக்கப்படும் -மஸ்கெலியா பிரதேச சபைத் தலைவர் தெரிவிப்பு மஸ்கெலியா பிரதேச சபையின் ஊடாக போது மக்களின் பிரச்சினைகள் மற்றும் தேவைகள் கால தாமதமின்றி நிறைவேற்றிக் கொடுக்கப்படும் என மஸ்கெலியா பிரதேச சபைத் தலைவர் கே. ராஜ்குமார் தெரிவித்தார்.   பிரதேச சபையின் நவீன மயப்படுத்தப்பட்ட புதிய அலுவலகம் சம்பந்தமாக  (28) நேற்று கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.  அவர்  மேலும் கூறுகையில்,மிகவும் வசதி குறைந்த நிலையில் காணப்பட்ட பிரதேச சபைத் தலைவரின் அலுவலகம் பொது மக்கள் தாராளமாக அமர்ந்து சந்தித்துக் கதைக்கக் கூடிய வகையில் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தை சாதாரண ஒரு பெண் தொழிலாளி ஒருவரைக் கொண்டு திறந்து வைத்துள்ளோம்.மேலும் தேவை கருதி இங்கு வருகை தரும் மக்களுக்கு தேநீர் உபசாரம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்தோடு அவர்களின் தேவைகள் கால தாமதமின்றி உடனுக்குடன் நிறைவேற்றிக் கொடுக்குமாறு உத்தியோகத்தர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. மறைப்பதும் இருந்தால் எனது கவனத்துக்குக் கொண்டு வரலாம்.  எமது பிரதேச சபையின் 10  வட்டாரங்களைச் சேர்ந்த 17 உறுப்பினர்களுக்கும் 2025 வரவு செலவுத் திட்டத்தில் தலா ஒரு இலட்ச ரூபா நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. அந்தத் தொகை 2026 இல் ஒவ்வொரு உறுப்பினருக்கும் 3½  இலட்சமாக அதிகரிக்கப்ப்டவுள்ளதால், தமது வட்டாரங்களில் கூடுதலான அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ளக் கூடியதாக இருக்கும். மேலும், இந்த ஆண்டில் முதன் முறையாக முன்பள்ளி அபிவிருத்திக்கு பிரதேச சபையின் ஊடாக பாரிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது இம்முறை சிவனொளிபாதமலைக்கு வருகை தரும் யாத்திரிகர்களின் எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. யாத்திரிகர்களின் நலன் கருதி, வாகனத் தரிப்பிடம், குடிநீர், மலசல கூட வசதிகள் உட்பட தற்காலிகக் கடைகள் பல திறக்கப்பட்டுள்ள போதிலும் வார இறுதி நாட்களைத் தவிர ஏனைய நாட்களில் யாத்திரிகர்கள் மிகவும் குறைவாகவே வந்து போகின்றார்கள்.கடந்த ஆண்டு இறுதியில் ஏற்பட்ட மழை வெள்ளம், புயல் மற்றும் மண்சரிவு காரணமாக ஏற்பட்ட போக்குவரத்துத் தடைகளும் புகையிரத சேவை இடம்பெறாமல் உள்ளமையும் பிரதான காரணங்களாகும். எனினும், அடுத்த மாதத்திலிருந்து யாத்திரிகர் வ்ருகையில் முனேற்றம் ஏற்படுமென்று எதிர்பார்க்கப்படுகின்றது. அவர்களுக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க பிரதேச சபை தயாராக இருக்கின்றது. இலங்கை போக்குவரத்துச் சபை நல்லதண்ணீர்-அட்டன் புகையிரத இணைப்பு பஸ் சேவையை வழங்கும். தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை நல்லதண்ணீர் பொலிஸ் நிலையம் மேற்கொள்ளும் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement