• Jul 16 2026

செம்மணியில் கைக்குழந்தை உட்பட 7 எலும்புக்கூடுகள் மீட்பு

Chithra / Jul 16th 2026, 6:42 pm
image


இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாகக் கருதப்படும் யாழ்ப்பாணம் செம்மணி சித்துபாத்தி மனித புதைகுழி அகழாய்வில் இதுவரை 420 மனித எலும்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.


அகழாய்வின் 34ஆவது நாளான இன்று (16), மேலும் 6 மனித எலும்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டதுடன், 7 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.


மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளில் ஒரு கைக்குழந்தை உட்பட 3 சிறுவர்களின் எலும்புக்கூடுகளும், 3 பெரியவர்களின் எலும்புக்கூடுகளும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், இன்று ஒரு பாசிமணியும் சான்றுப் பொருளாக மீட்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை அகழாய்வில் மொத்தம் 130 சான்றுப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ். லெனின் குமார் முன்னிலையில் நடைபெற்று வரும் அகழாய்வில், இதுவரை அடையாளம் காணப்பட்ட 420 மனித எலும்புத் தொகுதிகளில் 416 எலும்பு எச்சங்கள் துப்புரவாக்கப்பட்டு, அடையாளமிடப்பட்டு, அகழ்ந்தெடுக்கப்பட்டு நீதிமன்றத்தின் கட்டுக்காவலில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

செம்மணியில் கைக்குழந்தை உட்பட 7 எலும்புக்கூடுகள் மீட்பு இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாகக் கருதப்படும் யாழ்ப்பாணம் செம்மணி சித்துபாத்தி மனித புதைகுழி அகழாய்வில் இதுவரை 420 மனித எலும்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.அகழாய்வின் 34ஆவது நாளான இன்று (16), மேலும் 6 மனித எலும்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டதுடன், 7 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளில் ஒரு கைக்குழந்தை உட்பட 3 சிறுவர்களின் எலும்புக்கூடுகளும், 3 பெரியவர்களின் எலும்புக்கூடுகளும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், இன்று ஒரு பாசிமணியும் சான்றுப் பொருளாக மீட்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை அகழாய்வில் மொத்தம் 130 சான்றுப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ். லெனின் குமார் முன்னிலையில் நடைபெற்று வரும் அகழாய்வில், இதுவரை அடையாளம் காணப்பட்ட 420 மனித எலும்புத் தொகுதிகளில் 416 எலும்பு எச்சங்கள் துப்புரவாக்கப்பட்டு, அடையாளமிடப்பட்டு, அகழ்ந்தெடுக்கப்பட்டு நீதிமன்றத்தின் கட்டுக்காவலில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement