• Apr 15 2026

சிலாபத்தில் ஹெராயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது

Chithra / Jan 29th 2026, 12:31 pm
image

சிலாபம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரவிடாகரிய பகுதியில் ஒருதொகை ஹெராயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிலாபம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், நேற்று குறித்த பகுதியில் விஷேட சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.

இதன்போது குறித்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவரை சோதனை செய்த பொலிஸார், அவரிடமிருந்து 70 கிராம் 180 மில்லி கிராம் ஹெராயின் போதைப்பொருள் மற்றும் அவர் பயணித்த மோட்டார் சைக்கிள் என்பனவற்றுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிலாபம், கரவிடாகரிய பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


சிலாபத்தில் ஹெராயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது சிலாபம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரவிடாகரிய பகுதியில் ஒருதொகை ஹெராயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.சிலாபம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், நேற்று குறித்த பகுதியில் விஷேட சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.இதன்போது குறித்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவரை சோதனை செய்த பொலிஸார், அவரிடமிருந்து 70 கிராம் 180 மில்லி கிராம் ஹெராயின் போதைப்பொருள் மற்றும் அவர் பயணித்த மோட்டார் சைக்கிள் என்பனவற்றுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.சிலாபம், கரவிடாகரிய பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் தொடர்பில் சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement