• Aug 25 2025

ரணிலின் நிலை பற்றி கேள்வி எழுப்பிய மூன்று நாடுகளின் ஜனாதிபதிகள்

Aathira / Aug 25th 2025, 10:44 am
image

கைது செய்யப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நிலைமை தொடர்பில் மூன்று நாடுகளின் ஜனாதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேகுணவர்தனவுடன் தொலைபேசியில் உரையாடிய போதே ரணிலை பற்றி விசாரித்ததாக  அக்கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் குழுவொன்று நேற்று மாலை கொழும்பிற்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவைச் சந்தித்தது.

இன்று நாட்டிற்கு வருகை தரவுள்ள அமெரிக்க தூதுக்குழுவையும் சந்திக்க ஐக்கிய தேசியக் கட்சி திட்டமிட்டுள்ளது.

இதேவேளை, ரணிலின் கைது தொடர்பான விவரங்களைக் கோரி பல முக்கிய சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களைத் தொடர்பு கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

ரணிலின் நிலை பற்றி கேள்வி எழுப்பிய மூன்று நாடுகளின் ஜனாதிபதிகள் கைது செய்யப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நிலைமை தொடர்பில் மூன்று நாடுகளின் ஜனாதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேகுணவர்தனவுடன் தொலைபேசியில் உரையாடிய போதே ரணிலை பற்றி விசாரித்ததாக  அக்கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.ஐக்கிய தேசியக் கட்சியின் குழுவொன்று நேற்று மாலை கொழும்பிற்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவைச் சந்தித்தது.இன்று நாட்டிற்கு வருகை தரவுள்ள அமெரிக்க தூதுக்குழுவையும் சந்திக்க ஐக்கிய தேசியக் கட்சி திட்டமிட்டுள்ளது.இதேவேளை, ரணிலின் கைது தொடர்பான விவரங்களைக் கோரி பல முக்கிய சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களைத் தொடர்பு கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement