• Aug 06 2025

நாடாளுமன்றில் கூச்சலிட்டு குழப்பத்தை ஏற்படுத்திய எதிரணி; கொந்தளித்த சபாநாயகர்

Chithra / Aug 6th 2025, 1:00 pm
image

 

ஜனாதிபதி நிதியத்தின் புலமைப்பரிசில் பெற்று வெளிநாட்டு பல்கலைக்கழத்தில் பட்டப்படிப்பை மேற்கொண்டது தொடர்பில் ஹர்சன ராஜகருணாவுக்கு விளக்குவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்ட போது அவர் குறித்த விடயத்துக்கு அப்பால் சென்று கருத்து தெரிவித்ததை அடுத்து சபாநாயகர் அவரை நிறுத்தியால் நாடாளுமன்றில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

நாடாளுமன்றில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உப்பினர்கள் எழுந்து நின்று நாடாளுமன்ற நடவடிக்கைகளை முன்கொண்டு செல்ல முடியாத வகையில் கூச்சல் குழப்பம் ஏற்படுத்தியோடு சபாநாயகருக்கும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதேவேளை, ஹர்சன ராஜகருணாவுக்கு பேசுவதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு தொடர்ந்தும் கூச்சலிட்டு குழப்பம் ஏற்படுத்தினர்.

அதன் போது, சபாநாயகர் கடும் தொனியில் பேசியும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூச்சல் குழப்பத்தை நிறுத்தவில்லை.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ எழுந்து நின்று விளக்கம் தெரிவித்த போதும் சபாநாயகர் அவரை பேச விடாமல் தடுத்து நிறுத்தினார்.

தொடர்ந்து கூச்சல் குழப்பத்தின் மத்தியில் சபை நடவடிக்கை முன்கொண்டு செல்லப்பட்டது.

பின்னர் சபாநாயகர் பிரதி சபாநாயகருக்கு சபையை பாராப்படுத்திவிட்டு வெளியேறிச் சென்றார்.

நாடாளுமன்றில் கூச்சலிட்டு குழப்பத்தை ஏற்படுத்திய எதிரணி; கொந்தளித்த சபாநாயகர்  ஜனாதிபதி நிதியத்தின் புலமைப்பரிசில் பெற்று வெளிநாட்டு பல்கலைக்கழத்தில் பட்டப்படிப்பை மேற்கொண்டது தொடர்பில் ஹர்சன ராஜகருணாவுக்கு விளக்குவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்ட போது அவர் குறித்த விடயத்துக்கு அப்பால் சென்று கருத்து தெரிவித்ததை அடுத்து சபாநாயகர் அவரை நிறுத்தியால் நாடாளுமன்றில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.நாடாளுமன்றில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உப்பினர்கள் எழுந்து நின்று நாடாளுமன்ற நடவடிக்கைகளை முன்கொண்டு செல்ல முடியாத வகையில் கூச்சல் குழப்பம் ஏற்படுத்தியோடு சபாநாயகருக்கும் எதிர்ப்பு தெரிவித்தனர்.அதேவேளை, ஹர்சன ராஜகருணாவுக்கு பேசுவதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு தொடர்ந்தும் கூச்சலிட்டு குழப்பம் ஏற்படுத்தினர்.அதன் போது, சபாநாயகர் கடும் தொனியில் பேசியும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூச்சல் குழப்பத்தை நிறுத்தவில்லை.எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ எழுந்து நின்று விளக்கம் தெரிவித்த போதும் சபாநாயகர் அவரை பேச விடாமல் தடுத்து நிறுத்தினார்.தொடர்ந்து கூச்சல் குழப்பத்தின் மத்தியில் சபை நடவடிக்கை முன்கொண்டு செல்லப்பட்டது.பின்னர் சபாநாயகர் பிரதி சபாநாயகருக்கு சபையை பாராப்படுத்திவிட்டு வெளியேறிச் சென்றார்.

Advertisement

Advertisement

Advertisement