• Aug 29 2025

எதிர்க்கட்சிகளின் ஒன்றிணைவு அரசாங்கத்துக்கு சவாலல்ல - மஹிந்த ஜயசிங்க கருத்து

Chithra / Aug 28th 2025, 9:40 am
image


தேர்தல் ஒன்றுக்கு அறிவிப்பு விடுத்தால் எதிர்க்கட்சிகளின் ஒன்றிணைவின் உறுதிப்பாட்டை விளங்கிக் கொள்ளலாம். எதிர்க்கட்சிகளின் ஒன்றிணைவு அரசாங்கத்துக்கு சவாலல்ல என தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து  தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவத்துக்கு அவர் பொறுப்புக்கூற வேண்டும் என்று கடந்த காலங்களில் அவர் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்த அணியினர் தான் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக போரட்டத்தில் ஈடுபடுவதாக குறிப்பிடுகிறார்கள்.

166 இலட்சம் ரூபாய் அரசநிதியை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டுக்காகவே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டார். இதனை எவ்வாறு ஜனநாயக விரோத செயல் என்று குறிப்பிட முடியும்.

முன்னாள் அமைச்சர்கள் பலர் அரச நிதி மோசடிக்காக இன்றும் சிறையில் உள்ளார்கள். 

அவ்வாறாயின் அதுவும் ஜனநாயக விரோத செயலா, அவர்களுக்கு ஆதரவாகவும் எதிர்தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட வேண்டியது தானே? என தெரிவித்தார். 

ஊழல்வாதிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் ஊழல்வாதிகள் முன்னெச்சரிக்கையாக ஒன்றிணைந்துள்ளார்கள்.  என தெரிவித்தார். 

எதிர்க்கட்சிகளின் ஒன்றிணைவு அரசாங்கத்துக்கு சவாலல்ல - மஹிந்த ஜயசிங்க கருத்து தேர்தல் ஒன்றுக்கு அறிவிப்பு விடுத்தால் எதிர்க்கட்சிகளின் ஒன்றிணைவின் உறுதிப்பாட்டை விளங்கிக் கொள்ளலாம். எதிர்க்கட்சிகளின் ஒன்றிணைவு அரசாங்கத்துக்கு சவாலல்ல என தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து  தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவத்துக்கு அவர் பொறுப்புக்கூற வேண்டும் என்று கடந்த காலங்களில் அவர் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்த அணியினர் தான் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக போரட்டத்தில் ஈடுபடுவதாக குறிப்பிடுகிறார்கள்.166 இலட்சம் ரூபாய் அரசநிதியை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டுக்காகவே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டார். இதனை எவ்வாறு ஜனநாயக விரோத செயல் என்று குறிப்பிட முடியும்.முன்னாள் அமைச்சர்கள் பலர் அரச நிதி மோசடிக்காக இன்றும் சிறையில் உள்ளார்கள். அவ்வாறாயின் அதுவும் ஜனநாயக விரோத செயலா, அவர்களுக்கு ஆதரவாகவும் எதிர்தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட வேண்டியது தானே என தெரிவித்தார். ஊழல்வாதிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் ஊழல்வாதிகள் முன்னெச்சரிக்கையாக ஒன்றிணைந்துள்ளார்கள்.  என தெரிவித்தார். 

Advertisement

Advertisement

Advertisement