• Aug 27 2025

150 கிலோவில் பிரம்மாண்ட கொழுக்கட்டை படையல் ; உச்சி மலைப் பிள்ளையாருக்கு பக்தர்கள் சுமந்து சென்ற தருணம்!

shanuja / Aug 27th 2025, 12:50 pm
image

விநாயகர் சதுர்த்தியை ஒட்டி 150 கிலோ அளவிலான கொழுக்கட்டை செய்து விநாயகருக்கு அடியவர்கள் சுமந்து சென்றுள்ளனர். 


விநாயகர் சதுர்த்தி உலகெங்கும் இன்று  பக்திபூர்வமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. 

விநாயகரைக் கொண்டாடும் விழாவாக இன்றைய நாளான விநாயகர் சதுர்த்தி போற்றப்படுகின்றது. 


ஒவ்வொரு விநாயகர் ஆலயங்களிலும் இன்று விநாயகர் சதுர்த்தி வெகு சிறப்பாக இடம்பெறுகின்றது. 


அந்த வகையில்  திருச்சி மலைக்கோட்டை விநாயகர் ஆலயத்தில் 150 கிலோவில் கொழுக்கட்டை செய்து படையலிடப்பட்டுள்ளது. 


உச்சி விநாயகருக்கு 75 கிலோவும், மாணிக்க விநாயகருக்கு 75 கிலோவும் என 150 கிலோ கொழுக்கட்டை  அடிவாரத்தில் இருந்து எடுத்துச் சென்று படையலிடப்பட்டது. 


அடிவாரத்திலிருந்து 150 கிலோ கொழுக்கட்டையை பக்தர்கள் சுமந்து கொண்டு உச்சிமலைக்குக் கொண்டு செல்லும் காட்சி பரவசமடைய வைத்துள்ளது.

150 கிலோவில் பிரம்மாண்ட கொழுக்கட்டை படையல் ; உச்சி மலைப் பிள்ளையாருக்கு பக்தர்கள் சுமந்து சென்ற தருணம் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி 150 கிலோ அளவிலான கொழுக்கட்டை செய்து விநாயகருக்கு அடியவர்கள் சுமந்து சென்றுள்ளனர். விநாயகர் சதுர்த்தி உலகெங்கும் இன்று  பக்திபூர்வமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. விநாயகரைக் கொண்டாடும் விழாவாக இன்றைய நாளான விநாயகர் சதுர்த்தி போற்றப்படுகின்றது. ஒவ்வொரு விநாயகர் ஆலயங்களிலும் இன்று விநாயகர் சதுர்த்தி வெகு சிறப்பாக இடம்பெறுகின்றது. அந்த வகையில்  திருச்சி மலைக்கோட்டை விநாயகர் ஆலயத்தில் 150 கிலோவில் கொழுக்கட்டை செய்து படையலிடப்பட்டுள்ளது. உச்சி விநாயகருக்கு 75 கிலோவும், மாணிக்க விநாயகருக்கு 75 கிலோவும் என 150 கிலோ கொழுக்கட்டை  அடிவாரத்தில் இருந்து எடுத்துச் சென்று படையலிடப்பட்டது. அடிவாரத்திலிருந்து 150 கிலோ கொழுக்கட்டையை பக்தர்கள் சுமந்து கொண்டு உச்சிமலைக்குக் கொண்டு செல்லும் காட்சி பரவசமடைய வைத்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement