• Jul 05 2025

தாய் வேலைக்கு சென்றவேளை அண்ணன் - தங்கைக்கு நடந்த கொடூரம்

Chithra / May 20th 2025, 11:56 am
image


காலி மாவட்டம் கொஸ்கொடை பொலிஸ் பிரிவில் பத்து வயது சகோதரனும் எட்டு வயது சகோதரியும் மூன்று ஆண்களால் கடும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

இலவங்கப்பட்டை உரிக்கும் தொழிலுக்கு தாய் வீட்டை விட்டு சென்றவுடன் மூன்று ஆண்கள் வீட்டில் தனியாக இருந்த சகோதரனையும் சகோதரியையும் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில்  22, 73 மற்றும் 63 வயதுடைய மூன்று சந்தேக நபர்கள் நேற்று கொஸ்கொடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் 22  வயதுடைய இளைஞன் பாதிகப்பட்ட சிறுவர்களின் நெருங்கிய உறவினர். மற்றைய இருவரும் அந்தப்பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

இரண்டு சிறுவர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் பலப்பிட்டிய நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

கொஸ்கொடை பொலிஸின் பிரதம பொலிஸ் பரிசோதகர் துனுவில பண்டார மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்.

தாய் வேலைக்கு சென்றவேளை அண்ணன் - தங்கைக்கு நடந்த கொடூரம் காலி மாவட்டம் கொஸ்கொடை பொலிஸ் பிரிவில் பத்து வயது சகோதரனும் எட்டு வயது சகோதரியும் மூன்று ஆண்களால் கடும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,இலவங்கப்பட்டை உரிக்கும் தொழிலுக்கு தாய் வீட்டை விட்டு சென்றவுடன் மூன்று ஆண்கள் வீட்டில் தனியாக இருந்த சகோதரனையும் சகோதரியையும் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளனர்.இந்த சம்பவம் தொடர்பில்  22, 73 மற்றும் 63 வயதுடைய மூன்று சந்தேக நபர்கள் நேற்று கொஸ்கொடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.அவர்களில் 22  வயதுடைய இளைஞன் பாதிகப்பட்ட சிறுவர்களின் நெருங்கிய உறவினர். மற்றைய இருவரும் அந்தப்பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.இரண்டு சிறுவர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சந்தேக நபர்கள் பலப்பிட்டிய நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.கொஸ்கொடை பொலிஸின் பிரதம பொலிஸ் பரிசோதகர் துனுவில பண்டார மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்.

Advertisement

Advertisement

Advertisement