மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பிரவுன்ஸ்விக் தோட்ட புளூம்பீல்ட் பிரிவில் உள்ள மக்கள் சுத்தமான குடிநீர் கேட்டு இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்.பி.கே.பிலான்டேசனுக்கு உரித்தான பிரவுன்சிவிக் தோட்ட புளூம்பீல்ட் பிரிவில் 235 குடும்பங்களைச் சேர்ந்த 1000 க்கு மேற்பட்ட மக்கள் வசிக்கும் பகுதியிலும், புளூம்பீல்ட் தேசிய பாடசாலை 1000 மேற்பட்ட தரம் ஒன்று முதல் 13 வரை கல்வி பயிலும் மாணவர்கள் உள்ள பகுதிகளில், தோட்டத்தில் பணி புரியும் தொழிலாளர்கள் சுத்தமான குடிநீர் கேட்டு போராட்டம் மேற்கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவிக்கையில்
கடந்த பல வருடங்களாக தமக்கு வழங்கும் குடிநீர் அசுத்தமானது எனவும் மழை காலத்தில் குடி நீர் பெறப்படும் இடத்தில் கழிவுநீர் தேங்கி நிற்கும் நிலையில் அந்த நீரையே தோட்ட தொழிலாளர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் அருந்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஆகையால் அங்கு உள்ள வாய்க்கால்கள் அனைத்தும் ஆழப்படுத்த வேண்டும் எனவும் அங்கு அமைக்கப்பட்டு உள்ள மதகை உயர்த்தி பாலமாக அமைத்து கொடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட நோர்வூட் பிரதேச செயலாளருக்கு மகஜர் ஒன்றை கையளிக்க உள்ளனர்.
சுத்தமான குடிநீர் கேட்டு பிரவுன்ஸ்விக் தோட்ட புளூம்பீல்ட் மக்கள் போராட்டம் மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பிரவுன்ஸ்விக் தோட்ட புளூம்பீல்ட் பிரிவில் உள்ள மக்கள் சுத்தமான குடிநீர் கேட்டு இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்.பி.கே.பிலான்டேசனுக்கு உரித்தான பிரவுன்சிவிக் தோட்ட புளூம்பீல்ட் பிரிவில் 235 குடும்பங்களைச் சேர்ந்த 1000 க்கு மேற்பட்ட மக்கள் வசிக்கும் பகுதியிலும், புளூம்பீல்ட் தேசிய பாடசாலை 1000 மேற்பட்ட தரம் ஒன்று முதல் 13 வரை கல்வி பயிலும் மாணவர்கள் உள்ள பகுதிகளில், தோட்டத்தில் பணி புரியும் தொழிலாளர்கள் சுத்தமான குடிநீர் கேட்டு போராட்டம் மேற்கொண்டனர்.ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவிக்கையில் கடந்த பல வருடங்களாக தமக்கு வழங்கும் குடிநீர் அசுத்தமானது எனவும் மழை காலத்தில் குடி நீர் பெறப்படும் இடத்தில் கழிவுநீர் தேங்கி நிற்கும் நிலையில் அந்த நீரையே தோட்ட தொழிலாளர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் அருந்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.ஆகையால் அங்கு உள்ள வாய்க்கால்கள் அனைத்தும் ஆழப்படுத்த வேண்டும் எனவும் அங்கு அமைக்கப்பட்டு உள்ள மதகை உயர்த்தி பாலமாக அமைத்து கொடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட நோர்வூட் பிரதேச செயலாளருக்கு மகஜர் ஒன்றை கையளிக்க உள்ளனர்.