• Aug 28 2025

Chithra / Aug 27th 2025, 1:48 pm
image


விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் பொலிஸ்மா அதிபர் (IGP) தேசபந்து தென்னகோனுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர், கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர இந்த உத்தரவைப் பிறப்பித்தார். 

அதன்படி, சந்தேகநபர் தேசபந்து தென்னகோனை தலா 1 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் செல்ல அனுமதி வழங்கிய நீதவான், சந்தேகநபர் வெளிநாடு செல்வதற்கு தடை விதித்து உத்தரவிட்டார். 

காலி முகத்திடலில் நடந்த 'கோட்டா கோ காமா' போராட்டத்தின் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் முன்னாள் பொலிஸ்மா அதிபர் ஆகஸ்ட் 20 அன்று அவரது இல்லத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

இந்த முறைப்பாடு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 3 ஆம் திகதி மீண்டும் அழைக்கப்படவுள்ளது.

 

தேசபந்து தென்னகோனுக்கு பிணை விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் பொலிஸ்மா அதிபர் (IGP) தேசபந்து தென்னகோனுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர், கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர இந்த உத்தரவைப் பிறப்பித்தார். அதன்படி, சந்தேகநபர் தேசபந்து தென்னகோனை தலா 1 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் செல்ல அனுமதி வழங்கிய நீதவான், சந்தேகநபர் வெளிநாடு செல்வதற்கு தடை விதித்து உத்தரவிட்டார். காலி முகத்திடலில் நடந்த 'கோட்டா கோ காமா' போராட்டத்தின் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் முன்னாள் பொலிஸ்மா அதிபர் ஆகஸ்ட் 20 அன்று அவரது இல்லத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.இந்த முறைப்பாடு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 3 ஆம் திகதி மீண்டும் அழைக்கப்படவுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement