• Apr 15 2026

கட்டுநாயக்க விமான நிலையத்தை பரபரப்பாக்கிய சீனத் தம்பதி

Chithra / Apr 10th 2026, 11:24 am
image

நிதி மோசடிகளுக்கு பயன்படுத்தப்படும் 50 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் சட்டவிரோதப் பொருட்களுடன் இரண்டு சீனப் பிரஜைகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இன்று வெள்ளிக்கிழமை (10) அதிகாலை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 


35 மற்றும் 31 வயதுடைய சீன நாட்டுத் தம்பதியினரே, விமான நிலையத்தின் கிரீன் சேனல் ஊடாக பொருட்களைக் கடத்த முயன்றபோது கைது செய்யப்பட்டுள்ளனர்.


குறித்த நபர்கள் சீனாவிலிருந்து சைனா ஈஸ்டர்ன் விமான சேவைக்குச் சொந்தமான விமானம் மூலம் நாட்டை வந்தடைந்துள்ளதாக விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இவர்களது பயணப் பொதிகளிலிருந்து 84 பயன்படுத்தப்பட்ட ஆப்பிள் கையடக்கத் தொலைபேசிகள், 10,000 சீனத் தயாரிப்பு சிகரெட்டுகள் மற்றும் 40 கிலோகிராம் சீனப் பாக்கு என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.


மேலதிக விசாரணைகளுக்காக குறித்த சீனப் பிரஜைகள் மற்றும் கைப்பற்றப்பட்ட பொருட்கள் பொலிஸாரின் விசேட விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளன.  

கட்டுநாயக்க விமான நிலையத்தை பரபரப்பாக்கிய சீனத் தம்பதி நிதி மோசடிகளுக்கு பயன்படுத்தப்படும் 50 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் சட்டவிரோதப் பொருட்களுடன் இரண்டு சீனப் பிரஜைகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.இன்று வெள்ளிக்கிழமை (10) அதிகாலை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 35 மற்றும் 31 வயதுடைய சீன நாட்டுத் தம்பதியினரே, விமான நிலையத்தின் கிரீன் சேனல் ஊடாக பொருட்களைக் கடத்த முயன்றபோது கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த நபர்கள் சீனாவிலிருந்து சைனா ஈஸ்டர்ன் விமான சேவைக்குச் சொந்தமான விமானம் மூலம் நாட்டை வந்தடைந்துள்ளதாக விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இவர்களது பயணப் பொதிகளிலிருந்து 84 பயன்படுத்தப்பட்ட ஆப்பிள் கையடக்கத் தொலைபேசிகள், 10,000 சீனத் தயாரிப்பு சிகரெட்டுகள் மற்றும் 40 கிலோகிராம் சீனப் பாக்கு என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.மேலதிக விசாரணைகளுக்காக குறித்த சீனப் பிரஜைகள் மற்றும் கைப்பற்றப்பட்ட பொருட்கள் பொலிஸாரின் விசேட விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளன.  

Advertisement

Advertisement

Advertisement