கொழும்பு துறைமுக நகரில் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் மற்றும் வர்த்தகர்களை அச்சுறுத்தி, கப்பம் கோரும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சீனப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினரால் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சீனாவைத் தளமாகக் கொண்டு செயற்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவொன்றின் முக்கிய உறுப்பினராகச் சந்தேகிக்கப்படும் குறித்த நபர், நீண்டகாலமாக இலங்கையில் தங்கியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு துறைமுக நகரில் முதலீட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் வர்த்தகர்களிடம் அச்சுறுத்தல் விடுத்து கப்பம் கோரப்பட்டதாகப் பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இந்த முறைப்பாடுகளின் அடிப்படையில் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினர் முன்னெடுத்த விசாரணைகளின்போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நான்கு போலி கடவுச்சீட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், வேறு நபர்களின் பெயர்களில் வழங்கப்பட்ட கடவுச்சீட்டுகளைப் பயன்படுத்தி, சந்தேகநபர் இலங்கையில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்ததாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேகநபரின் குற்றச் செயல்கள் மற்றும் அவருடன் தொடர்புடையதாகக் கூறப்படும் சர்வதேச குற்றக் குழு தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இலங்கையை பரபரப்பாக்கிய சீனப் பிரஜை; பல ஆண்டுகளாகத் தங்கியிருந்தது ஏன் கொழும்பு துறைமுக நகரில் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் மற்றும் வர்த்தகர்களை அச்சுறுத்தி, கப்பம் கோரும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சீனப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினரால் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.சீனாவைத் தளமாகக் கொண்டு செயற்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவொன்றின் முக்கிய உறுப்பினராகச் சந்தேகிக்கப்படும் குறித்த நபர், நீண்டகாலமாக இலங்கையில் தங்கியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.கொழும்பு துறைமுக நகரில் முதலீட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் வர்த்தகர்களிடம் அச்சுறுத்தல் விடுத்து கப்பம் கோரப்பட்டதாகப் பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.இந்த முறைப்பாடுகளின் அடிப்படையில் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினர் முன்னெடுத்த விசாரணைகளின்போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நான்கு போலி கடவுச்சீட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மேலும், வேறு நபர்களின் பெயர்களில் வழங்கப்பட்ட கடவுச்சீட்டுகளைப் பயன்படுத்தி, சந்தேகநபர் இலங்கையில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்ததாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.சந்தேகநபரின் குற்றச் செயல்கள் மற்றும் அவருடன் தொடர்புடையதாகக் கூறப்படும் சர்வதேச குற்றக் குழு தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.