சவால்களுக்கு மத்தியிலும் சாதனை படைத்திருக்கின்ற வயாவிளான் மத்திய கல்லூரி மாணவர்களின் தன்னம்பிக்கை பாராட்டப்பட வேண்டியதுடன் சிலிர்க்க வைக்கும் வகையிலும் உள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
மேலும், விளையாட்டைப் போன்றே கற்றல் செயற்பாடு உள்ளிட்ட அனைத்து செயற்பாடுகளிலும் மாணவர்கள் ஆர்வமுடன் பங்குபற்றி எதிர்காலத்திற்கான ஆரோக்கியமான பிரஜைகளாக உருவாக வேண்டும் எனவும் தெரிவித்தார்.
அண்மையில் அநுராதபுரத்தில் இடம்பெற்ற தேசிய மட்டத்திலான உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டியில் 16 வயதிற்குட்பட்டோருக்கான பிரிவில் வயாவிளான் மத்திய கல்லூரி அணி முதலிடம் பெற்றுள்ளது.
கடந்த கால அசாதாரண சூழல் காரணமாக வயாவிளான் மத்திய கல்லூரி தற்காலிகமாக உரும்பிராயில் இயங்கி வந்தது.
இந்நிலையில், 2010. ஆம் ஆண்டு மீள்குடியேற்றம் முன்னெடுக்கப்பட்ட காலத்தில், பாடசாலை சமூகத்தினரின் கோரிக்கைக்கு அமைய, முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், குறித்த பாடசாலைக்கு தேவையான முதற்கட்ட உட்கட்டமைப்பு மற்றும் ஆளனி வசதிகளை ஏற்பாடு செய்து கொடுத்ததுடன், அப்போதைய பாதுகாப்பு அமைச்சுடன் கலந்துரையாடி கல்லூரிக்கு சொந்தமான காணிகளையும் விடுவித்து கொடுத்தது மாத்திரமல்லாமல், கல்லூரியை தரமுயர்த்துவதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்திருந்தார்.
இந்நிலையில், பல்வேறு வளப் பற்றாக்குறைகள் காணப்படுகின்றபோதிலும், தன்னம்பிக்கையுடன் பயிற்சிகளில் ஈடுபட்டு இன்று சாதனை படைத்துள்ள மாணவர்களை பாராட்டியுள்ள செயலாளர் நாயகம், எதிர்காலத்தில் சந்தர்ப்பங்கள் கிடைக்கின்ற பட்சத்தில் மேலும் கல்லூரியின் தேவைகள் நிறைவேற்றப்படும் எனவும் தெரிவித்துள்மை குறிப்பிடத்தக்கது.
வயாவிளான் மாணவர்களின் சாதனைகள் சிலிர்க்க வைக்கின்றன - டக்ளஸ் புகழாரம் சவால்களுக்கு மத்தியிலும் சாதனை படைத்திருக்கின்ற வயாவிளான் மத்திய கல்லூரி மாணவர்களின் தன்னம்பிக்கை பாராட்டப்பட வேண்டியதுடன் சிலிர்க்க வைக்கும் வகையிலும் உள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.மேலும், விளையாட்டைப் போன்றே கற்றல் செயற்பாடு உள்ளிட்ட அனைத்து செயற்பாடுகளிலும் மாணவர்கள் ஆர்வமுடன் பங்குபற்றி எதிர்காலத்திற்கான ஆரோக்கியமான பிரஜைகளாக உருவாக வேண்டும் எனவும் தெரிவித்தார்.அண்மையில் அநுராதபுரத்தில் இடம்பெற்ற தேசிய மட்டத்திலான உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டியில் 16 வயதிற்குட்பட்டோருக்கான பிரிவில் வயாவிளான் மத்திய கல்லூரி அணி முதலிடம் பெற்றுள்ளது.கடந்த கால அசாதாரண சூழல் காரணமாக வயாவிளான் மத்திய கல்லூரி தற்காலிகமாக உரும்பிராயில் இயங்கி வந்தது.இந்நிலையில், 2010. ஆம் ஆண்டு மீள்குடியேற்றம் முன்னெடுக்கப்பட்ட காலத்தில், பாடசாலை சமூகத்தினரின் கோரிக்கைக்கு அமைய, முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், குறித்த பாடசாலைக்கு தேவையான முதற்கட்ட உட்கட்டமைப்பு மற்றும் ஆளனி வசதிகளை ஏற்பாடு செய்து கொடுத்ததுடன், அப்போதைய பாதுகாப்பு அமைச்சுடன் கலந்துரையாடி கல்லூரிக்கு சொந்தமான காணிகளையும் விடுவித்து கொடுத்தது மாத்திரமல்லாமல், கல்லூரியை தரமுயர்த்துவதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்திருந்தார்.இந்நிலையில், பல்வேறு வளப் பற்றாக்குறைகள் காணப்படுகின்றபோதிலும், தன்னம்பிக்கையுடன் பயிற்சிகளில் ஈடுபட்டு இன்று சாதனை படைத்துள்ள மாணவர்களை பாராட்டியுள்ள செயலாளர் நாயகம், எதிர்காலத்தில் சந்தர்ப்பங்கள் கிடைக்கின்ற பட்சத்தில் மேலும் கல்லூரியின் தேவைகள் நிறைவேற்றப்படும் எனவும் தெரிவித்துள்மை குறிப்பிடத்தக்கது.