• Jun 19 2026

கற்பிட்டியில் பொலிஸாருக்கும் – விமானப்படைக்கும் இடையே பதற்றம்! விசாரணை ஆரம்பம்

Chithra / Jun 18th 2026, 7:21 pm
image



கற்பிட்டி கடற்பரப்பில் சோதனை நடவடிக்கையொன்றை முன்னெடுக்கச் சென்ற இலங்கை பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவிற்கும் விமானப்படை உறுப்பினர்கள் குழுவிற்கும் இடையே ஏற்பட்ட பதற்றமான நிலைமை தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 


நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சட்டவிரோத பொருட்கள் அடங்கிய தொகுதியொன்றைக் கைப்பற்றுவதற்காக பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவொன்று கற்பிட்டி கடற்பரப்பிற்குச் சென்றிருந்தது. 


இதன்போது, அங்கு கடமையில் ஈடுபட்டிருந்த விமானப்படை உறுப்பினர்கள் குழுவினர், குறித்த வலயம் தங்களது கட்டுப்பாட்டுக்குட்பட்ட பகுதி எனக் கூறியுள்ளனர். 


இதன் காரணமாக இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 


இச்சம்பவம் தொடர்பான விபரங்களைக் கண்டறிவதற்காக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


கற்பிட்டியில் பொலிஸாருக்கும் – விமானப்படைக்கும் இடையே பதற்றம் விசாரணை ஆரம்பம் கற்பிட்டி கடற்பரப்பில் சோதனை நடவடிக்கையொன்றை முன்னெடுக்கச் சென்ற இலங்கை பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவிற்கும் விமானப்படை உறுப்பினர்கள் குழுவிற்கும் இடையே ஏற்பட்ட பதற்றமான நிலைமை தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சட்டவிரோத பொருட்கள் அடங்கிய தொகுதியொன்றைக் கைப்பற்றுவதற்காக பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவொன்று கற்பிட்டி கடற்பரப்பிற்குச் சென்றிருந்தது. இதன்போது, அங்கு கடமையில் ஈடுபட்டிருந்த விமானப்படை உறுப்பினர்கள் குழுவினர், குறித்த வலயம் தங்களது கட்டுப்பாட்டுக்குட்பட்ட பகுதி எனக் கூறியுள்ளனர். இதன் காரணமாக இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பான விபரங்களைக் கண்டறிவதற்காக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement