நிந்தவூர் கடற்கரை பிர்தெளஸ் ஜும்ஆ பள்ளிவாசல் அருகே போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதுடன், பள்ளிவாசலுக்கு அவப்பெயர் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் இருவருக்கு சம்மாந்துறை நீதவான் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது.
இதன்படி, இருவருக்கும் தலா 1,500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதுடன், 5 ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த பல ஆண்டுகளாக பள்ளிவாசல் அருகே போதைப்பொருள் விற்பனை மற்றும் பாவனை நடைபெற்று வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதைத் தடுக்க பள்ளிவாசல் நிர்வாகமும் பேஷ் இமாமும் தொடர்ந்து விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்துள்ளனர்.
ஆனால், போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட சிலர் பள்ளிவாசல் நிர்வாகத்தினருடன் அடிக்கடி பிரச்சினைகளில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதன் உச்சக்கட்டமாக, 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் திகதி இஷா தொழுகை நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில், பள்ளிவாசல் வளாகத்திற்குள் பட்டாசு வீசி பரபரப்பை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
பின்னர் தொழுகையை முடித்து வெளியே வந்தவர்களுடனும் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து பள்ளிவாசல் பேஷ் இமாமும் நிர்வாகத்தினரும் நிந்தவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.
அதன் அடிப்படையில் வழக்கு சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
நீண்டகால விசாரணைக்குப் பிறகு, குற்றவாளிகளுக்கு அபராதம் மற்றும் 5 ஆண்டு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நிந்தவூரில் உள்ள ஜும்ஆ பள்ளிவாசல் ஒன்று போதைப்பொருளுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து வெற்றி பெற்ற முதல் சம்பவமாக இது கருதப்படுகிறது.
இந்த தீர்ப்பைத் தொடர்ந்து, இளைஞர்களை போதைப்பொருளில் இருந்து பாதுகாக்கும் வகையில் புனர்வாழ்வு நடவடிக்கைகள், மாணவர்களுக்கான கல்வி உதவிகள், சுய கற்றல் நிலையம் அமைத்தல் உள்ளிட்ட பல சமூக நலத் திட்டங்களை பள்ளிவாசல் நிர்வாகம் முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.
பள்ளிவாசல் அருகே போதைப்பொருள் விற்பனை; சம்மாந்துறை நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு நிந்தவூர் கடற்கரை பிர்தெளஸ் ஜும்ஆ பள்ளிவாசல் அருகே போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதுடன், பள்ளிவாசலுக்கு அவப்பெயர் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் இருவருக்கு சம்மாந்துறை நீதவான் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது.இதன்படி, இருவருக்கும் தலா 1,500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதுடன், 5 ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.கடந்த பல ஆண்டுகளாக பள்ளிவாசல் அருகே போதைப்பொருள் விற்பனை மற்றும் பாவனை நடைபெற்று வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதைத் தடுக்க பள்ளிவாசல் நிர்வாகமும் பேஷ் இமாமும் தொடர்ந்து விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்துள்ளனர்.ஆனால், போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட சிலர் பள்ளிவாசல் நிர்வாகத்தினருடன் அடிக்கடி பிரச்சினைகளில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.இதன் உச்சக்கட்டமாக, 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் திகதி இஷா தொழுகை நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில், பள்ளிவாசல் வளாகத்திற்குள் பட்டாசு வீசி பரபரப்பை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. பின்னர் தொழுகையை முடித்து வெளியே வந்தவர்களுடனும் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.இதையடுத்து பள்ளிவாசல் பேஷ் இமாமும் நிர்வாகத்தினரும் நிந்தவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர். அதன் அடிப்படையில் வழக்கு சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.நீண்டகால விசாரணைக்குப் பிறகு, குற்றவாளிகளுக்கு அபராதம் மற்றும் 5 ஆண்டு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.நிந்தவூரில் உள்ள ஜும்ஆ பள்ளிவாசல் ஒன்று போதைப்பொருளுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து வெற்றி பெற்ற முதல் சம்பவமாக இது கருதப்படுகிறது.இந்த தீர்ப்பைத் தொடர்ந்து, இளைஞர்களை போதைப்பொருளில் இருந்து பாதுகாக்கும் வகையில் புனர்வாழ்வு நடவடிக்கைகள், மாணவர்களுக்கான கல்வி உதவிகள், சுய கற்றல் நிலையம் அமைத்தல் உள்ளிட்ட பல சமூக நலத் திட்டங்களை பள்ளிவாசல் நிர்வாகம் முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.