• Mar 26 2026

விதிகளை மீறி வகுப்பு நடத்திய ஆசிரியர்கள் - தடுத்து நிறுத்திய பொலிஸார்!

shanu / Mar 25th 2026, 9:31 pm
image


ஹட்டன் பகுதியில் விதிகளை மீறி வகுப்பு நடத்திய ஆசிரியர்களை ஹட்டன் பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.


போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டைக் கருத்திற்கொண்டு, நாட்டின் எரிபொருள் கையிருப்பை முகாமைத்துவம் செய்வதற்காகப் புதன்கிழமைகளில் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.


இவ்வாறான விடுமுறை தினத்தில் ஹட்டன் பகுதியில் உள்ள, ஹிஜிராபுர பகுதியில் உள்ள திறந்தவெளி இடமொன்றில், ஹட்டன் பகுதியின் பிரதான தமிழ் பாடசாலை ஒன்றைச் சேர்ந்த இரண்டு ஆசிரியர்கள் எவ்வித அடிப்படை வசதிகளுமின்றி மாணவர்களுக்கு வகுப்புகளை நடத்தி வந்துள்ளனர்.


இந்த நிலையில் பிரதேச மக்களிடமிருந்து கிடைக்க பெற்ற இரகசிய தகவலை தொடர்ந்து, ஹட்டன் தலைமையகப் பொலிஸ் பொறுப்பதிகாரி டபிள்யூ.ஆர்.ஏ.டி. சுகததாச சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணைகளை நடத்தினார்.


அரசின் கல்வி அமைச்சின் சுற்றுநிருபம் என்பன குறித்து ஆசிரியர்களுக்குத் தெளிவுபடுத்திய பொலிஸார், உடனடியாக வகுப்புகளை நிறுத்துமாறு பணிப்புரை விடுத்து மாணவர்களை வீடுகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.


புதன்கிழமைகளில் ஆசிரியர்கள் எவ்விதமான பிரத்தியோக வகுப்புகளையும் நடத்தக்கூடாது என கல்வி அமைச்சு ஏற்கனவே கண்டிப்பான சுற்றுநிருபம் ஒன்றை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


நுவரெலியா மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இவ்வாறான மேலதிக வகுப்புக்கள் நடத்தப்பட்டு வருகிறது என எமக்கு போதுமானது தகவல் கிடைக்கப்பெற்ற நிலையில் முதல் முறையாக இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது எனவும் இவ்வாறான செயலை மீண்டும் எவரேனும் தொடர்ந்தால் அவர்கள் மீது பாரபட்சம் இல்லாமல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார். 

விதிகளை மீறி வகுப்பு நடத்திய ஆசிரியர்கள் - தடுத்து நிறுத்திய பொலிஸார் ஹட்டன் பகுதியில் விதிகளை மீறி வகுப்பு நடத்திய ஆசிரியர்களை ஹட்டன் பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டைக் கருத்திற்கொண்டு, நாட்டின் எரிபொருள் கையிருப்பை முகாமைத்துவம் செய்வதற்காகப் புதன்கிழமைகளில் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறான விடுமுறை தினத்தில் ஹட்டன் பகுதியில் உள்ள, ஹிஜிராபுர பகுதியில் உள்ள திறந்தவெளி இடமொன்றில், ஹட்டன் பகுதியின் பிரதான தமிழ் பாடசாலை ஒன்றைச் சேர்ந்த இரண்டு ஆசிரியர்கள் எவ்வித அடிப்படை வசதிகளுமின்றி மாணவர்களுக்கு வகுப்புகளை நடத்தி வந்துள்ளனர்.இந்த நிலையில் பிரதேச மக்களிடமிருந்து கிடைக்க பெற்ற இரகசிய தகவலை தொடர்ந்து, ஹட்டன் தலைமையகப் பொலிஸ் பொறுப்பதிகாரி டபிள்யூ.ஆர்.ஏ.டி. சுகததாச சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணைகளை நடத்தினார்.அரசின் கல்வி அமைச்சின் சுற்றுநிருபம் என்பன குறித்து ஆசிரியர்களுக்குத் தெளிவுபடுத்திய பொலிஸார், உடனடியாக வகுப்புகளை நிறுத்துமாறு பணிப்புரை விடுத்து மாணவர்களை வீடுகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.புதன்கிழமைகளில் ஆசிரியர்கள் எவ்விதமான பிரத்தியோக வகுப்புகளையும் நடத்தக்கூடாது என கல்வி அமைச்சு ஏற்கனவே கண்டிப்பான சுற்றுநிருபம் ஒன்றை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.நுவரெலியா மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இவ்வாறான மேலதிக வகுப்புக்கள் நடத்தப்பட்டு வருகிறது என எமக்கு போதுமானது தகவல் கிடைக்கப்பெற்ற நிலையில் முதல் முறையாக இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது எனவும் இவ்வாறான செயலை மீண்டும் எவரேனும் தொடர்ந்தால் அவர்கள் மீது பாரபட்சம் இல்லாமல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார். 

Advertisement

Advertisement

Advertisement